2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் விக்டோரிய Skilled Visa Nomination Program (subclass 190 and subclass 491)-க்கு தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.
விக்டோரியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்யும்பட்சத்தில், ஒரு Registration of Interest(ROI)ஐச் சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்:
- Skilled Nominated visa (subclass 190)
- Skilled Work Regional (Provisional) visa (subclass 491)
Skilled Nominated visa (subclass 190) என்பது skilled migrants விக்டோரியா மாநிலத்தில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற நிரந்தர விசா ஆகும்.
Skilled Work Regional (Provisional) visa (subclass 491) என்பது skilled migrants விக்டோரியாவில் regional பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற விசா என்பதுடன், Permanent Residence (Skilled Regional) visa (subclass 191) ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது.
இவ்விசாக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் முந்தைய ஆண்டுகளைப் போலவே, விண்ணப்பதாரர்கள் முதலில் Registration of Interest(ROI)ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.
2021-22 Skilled Visa Nomination திட்டத்திற்காக நீங்கள் ROI-ஐச் சமர்ப்பித்திருந்தாலும்கூட, 2022-23 திட்டத்திற்கான புதிய ROI-ஐச் சமர்ப்பிக்க வேண்டும்.
2021-22 Skilled Visa Nomination திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கக்கூடியதாக இருந்த பின்னணியில், 2022-23 திட்டத்திற்கு வெளிநாட்டிலுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதேவேளை விக்டோரியாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும்வகையில், மாநில தொழிற்பட்டியலில்(Skilled Occupation List) உள்ள தொழில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பிற நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.