489 விசா என்பது ஆஸ்திரேலியாவின் regional பகுதிகளில் வேலை செய்வதற்கென skilled migrants-க்கு வழங்கப்படும் விசாவாகும்.
இதற்காக விண்ணப்பித்துவிட்டு முடிவெதுவுமின்றிக் காத்திருக்கும் ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமது விசா விண்ணப்ப பரிசீலனையை விரைவுபடுத்துமாறு ஆஸ்திரேலிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், இவ்விசாவுக்கு விண்ணப்பித்தபோது இதற்கான பரிசீலனைக் காலம் சுமார் எட்டு மாதங்கள் என்று கூறப்பட்ட போதிலும் அது தற்போது 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாக விண்ணப்பதாரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் regional பகுதிகளில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்ற பின்னணியில், தமக்கான விசா விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் சுமார் 4000 டொலர்கள் செலுத்தி குறித்த விசாவுக்கு தாம் விண்ணப்பித்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வருடத்திற்குள் ஆஸ்திரேலியாவில் குடியேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் பலர் தாம் ஏற்கனவே பார்த்த வேலையை விட்டுவிட்டதாகவும், இன்னும் பலர் தங்கள் வீடுகளைக்கூட விற்றுவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

The families of 489 visa applicants in limbo appeal to the Australian government. Source: SBS News
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் குறித்த விசாவுக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் உள்ளதாகவும், அவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.