Backpaker மற்றும் Bridging வீசாவின் வேலை செய்யும் காலக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!!

வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா வந்து இங்கு சுற்றி பார்த்துக்கொண்டு பணிபுரிய விரும்புவோருக்கும் அல்லது ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் Working Holiday Backpaker வீசாவில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

Age limit changes for the Australian Working Holiday visa.

Credit: www.workingholiday.co

Backpaker வீசாவில் ஒரு முதலாளியிடம் ஆறு மாதத்திற்கு மேலதிகமாக வேலை செய்ய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று மட்டுமே பணி புரியவேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

Backpaker வீசா காலம் முழுவதும் ஒரே தொழில் வழங்குனரிடமே பணி புரியமுடியும் அதோடு கூடுதலாக 2023 ஜூலை முதலாம் தேதிக்கு முன் மேற்கொள்ளப்படும் எந்தப் பணியும் 6 மாத வரம்புக் காலத்திற்குள் கணக்கிடப்படாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 1, 2023க்கு முன்பு அதே தொழில் வழங்குனரிடம் பணிபுரிந்தார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், Backpaker வீசாவில் உள்ளவர்கள் தொடர்ந்து கூடுதலாக 6 மாதங்களுக்குப் அதே முதலாளியிடம் பணிபுரியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 மாதம் வரம்பு கட்டுப்பாடு நீக்கம் தற்போது ஆஸ்திரேலியாவில் Working Holiday விசாவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் அதோடு அவர்கள் எப்போது ஆஸ்திரேலியா வந்தார்கள் என்று பார்க்கப்படாது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாதம் வரம்பு கட்டுப்பாடு நீக்கம் நிபந்தனை 8547 விதிக்கப்பட்ட Bridging வீசாவில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 16 January 2023 12:00pm
By Selvi
Source: SBS

Share this with family and friends