Working Holiday விசாக்கள் - பெரும்பாலும் 'Backpacker விசாக்கள்' என்றும் குறிப்பிடப்படுகின்றன. தற்போது 18 முதல் 30 வயதுடைய தகுதியுள்ள நாடுகளின் குடிமக்களுக்கும், கனடா, டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி மற்றும் விரைவில் உட்பட ஒரு சில நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் 35 வயது வரையிலான வரம்புடன் இந்த வீசா வழங்கப்படுகிறது.
1975 இல் நிறுவப்பட்டது, இது இளைஞர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறை மற்றும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தற்காலிக வேலைகளில் வேலை செய்ய அனுமதிக்கிறது . இத்திட்டத்தின் பங்குதாரர் நாடுகளில் ஆஸ்திரேலியர்களும் விடுமுறைக்கு சென்று வேலை செய்யும் வகையில் இந்த திட்டம் பரஸ்பர இயல்புடையது.
ஆனால் சுற்றுலா மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட துறைகள் கோவிட் பேரிடர் தாக்கத்திலிருந்து மீளப் போராடி வரும் நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையுடன் சிக்கித் தவிப்பதால், Tourism and Transport Forum Australia (TTFA) Working Holiday விசாக்களை விரிவுபடுத்துவதற்கான அழைப்புகளை முன்வைத்து, வயது வரம்பை உயர்த்த பரிந்துரைக்கிறது

Source: SBS

Elin arrived in Australia on a working holiday visa in December, after applying just before she hit the age deadline. Credit: Supplied
விவசாயம் போன்ற பருவகால தொழில்களில் பணிப் புரிய இந்த Backpaker வீசா ஒரு நல்ல திட்டம் அது ஆஸ்திரேலியாவில் நன்றாக வேலை செய்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2021-22 ஆம் ஆண்டில், Working Holiday Maker திட்டத்திற்காக 95,901 விசா விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் இவர்களுக்கு நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு 16 டிசம்பர் 2022 நிலவரப்படி, கிட்டத்தட்ட 129,300 backpakers ஆஸ்திரேலியாவிற்கு வந்துள்ளனர்.
SBS தமிழ் குடியேற்றம் குறித்து ஆலோசனை வழங்காது. மேலதிக தகவல்களுக்கு இணையத்தளத்தை பார்வையிடவும். திட்டத்தைப் பற்றிய தகவலையும் மேல் உள்ள இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்
————————————————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.