இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் சிறப்பு விசா!

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே கடந்த டிசம்பர் 29 நடைமுறைக்கு வந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் இருநாடுகளும் Post Study Work Visa எனப்படும் கல்வி கற்றபின் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் விசாக்களை வழங்க ஒத்துக்கொண்டுள்ளன.

visa

Source: Getty / Getty images

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ்(Australia India Economic Cooperation and Trade Agreement) குறித்த இருநாடுகளுக்கும் பல நன்மைகள் ஏற்படவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவின் " Post Study Work விசா" திட்டமும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கவரும் ஒரு இந்திய மாணவர்:
  • Diploma அல்லது Trade தொடர்பான கல்வி கற்று முடித்தபின் ஒன்றரை ஆண்டுகள்வரை (18 மாதங்கள்) நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யலாம்.
  • Bachelor Degree கல்வி கற்று முடித்தபின் இரண்டு ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யலாம்.
  • Master’s Degree கல்வி கற்று முடித்தபின் மூன்று ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யலாம்.
  • Doctoral Degree  கல்வி கற்று முடித்தபின் அவர்கள் நான்கு ஆண்டுகள்வரை நாட்டில் தொடர்ந்து தங்கியிருந்து வேலை செய்யலாம்.
அதேநேரம் STEM என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளிலும் Information and Communications எனும் தகவல் மற்றும் தொடர்பு துறையிலும் First Class Honours bachelor’s degree-உடன் பட்டம்பெறும் இந்திய மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மொத்தம் மூன்று ஆண்டுகள்வரை post-study விசாவில் தங்கியிருந்து வேலை செய்யவும் ஆஸ்திரேலியா இணங்கியுள்ளது.

குறித்த திட்டம் எப்போது நடைமுறைக்குவரும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 5 January 2023 6:39pm
Updated 5 January 2023 6:53pm
Source: SBS

Share this with family and friends