ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு '3 நாட்களில் விசா'!

Skilled விசா விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறையை ஆஸ்திரேலிய அரசு மாற்றியமைத்துள்ள பிறகு, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான விசாக்கள் இப்போது சில நாட்களுக்குள் பரிசீலிக்கப்படுகின்றன.

Visa label

Source: AAP

ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான Skilled விசா விண்ணப்பங்கள், தற்போது வெறும் மூன்றே நாட்களில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

Skilled விசா பரிசீலனைக்கான முன்னுரிமை முறைமையினை ஆஸ்திரேலிய அரசு அண்மையில் மாற்றியமைத்துள்ளதையடுத்து, இவ்வளவு துரிதகதியில் குறித்த பிரிவினருக்கான விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இதுவரை காலமும் Skilled விசா விண்ணப்பங்களை தரவரிசைப்படுத்த PMSOL- Priority Migration Skilled தொழில் பட்டியலை பயன்படுத்திவந்தநிலையில், இதனை உள்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளது.

குறித்த நடைமுறை பழமையானது என்பதுடன், நாட்டில் எந்தத்துறையில் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது என்பதை இது பிரதிபலிக்காது என்பதால், அரசு ஏற்கனவே பின்பற்றிய நடைமுறையை மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Smiling female nurse examining document in hospital lobby
Visa applications for nurses are now only taking three days to process. Source: Getty / The Good Brigade
விசா பரிசீலனை ஊழியர்களை சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தும் புதிய இப்போது சுகாதாரம் மற்றும் கல்வித் துறை விசாக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

"இந்த விண்ணப்பங்கள் இப்போது மூன்று நாட்களில் மதிப்பிடப்படுகின்றன" என உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் SBS செய்திக்கு தெரிவித்தார்.

விசா விண்ணப்ப பரிசீலனையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் அனைத்து skilled visa nomination மற்றும் இன்னும் முடிவு செய்யப்படாத விசா விண்ணப்பங்களுக்கும் பொருந்தும். அத்துடன் temporary, employer-sponsored மற்றும் regional விசாக்கள் உட்பட தாக்கல் செய்யப்படும் புதிய விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

இதேவேளை global talent மற்றும் business innovation and investment programs க்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி விசா விண்ணப்ப பரிசீலனையில் முன்னுரிமை அளிக்கப்படும் பிரிவினரில் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரம் மற்றும் நலன்புரி உதவிப் பணியாளர்கள், குழந்தை பராமரிப்பு மைய மேலாளர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், counsellors, உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் உள்ளனர்.

Skilled விசா விண்ணப்ப பரிசீலனைக்கான புதிய முன்னுரிமை பட்டியல்

புதிய வழிகாட்டுதலின் கீழ், skilled விசா விண்ணப்பங்கள் பின்வரும் முன்னுரிமை வரிசையில் முடிவு செய்யப்படுகின்றன:

1. உடல்நலம் அல்லது கற்பித்தல் தொழில்சார் விண்ணப்பங்கள்(Healthcare or teaching)

2. Employer-sponsored விசாக்கள். Accredited Statusஉடன் அங்கீகரிக்கப்பட்ட ஸ்பான்சரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்.

3. நியமிக்கப்பட்ட regional பகுதிக்கானவை.

4. நிரந்தர மற்றும் தற்காலிக விசா துணைப்பிரிவுகள். Subclass 188 (Business Innovation and Investment (Provisional)) விசாவைத் தவிர்த்து, குடியேற்றத் திட்டத்தில் கணக்கிடப்படும் விசா விண்ணப்பங்கள்.

5. மற்ற அனைத்து விசா விண்ணப்பங்களும்.

மேலே உள்ள அனைத்து வகைகளும், அனைத்து நாட்டினருக்கும் திறக்கப்படாததால், தகுதியான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு வகையிலும், ஆஸ்திரேலியாவிற்கு வெளியே உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Australian Visa
Indian international students are now the largest group applying for student visas to Australia. Source: SBS
இதன்கீழ் பின்வரும் வரிசையில் விசா விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது.
  • Subclass 124 (Distinguished Talent)
  • Subclass 186 (Employer Nomination Scheme)
  • Subclass 187 (Regional Sponsored Migration Scheme)
  • Subclass 188 (Business Innovation and Investment) (Provisional)
  • Subclass 189 (Skilled - Independent)
  • Subclass 190 (Skilled - Nominated)
  • Subclass 191 (Permanent Residence (Skilled Regional))
  • Subclass 457 (Temporary Work (Skilled))
  • Subclass 482 (Temporary Skill Shortage)
  • Subclass 489 (Skilled - Regional (Provisional))
  • Subclass 491 (Skilled Work Regional (Provisional))
  • Subclass 494 (Employer Sponsored Regional (Provisional))
  • Subclass 858 (Global Talent)
  • Subclass 887 (Skilled - Regional)
  • Subclass 888 (Business Innovation and Investment (Permanent).
இதுகுறித்த மேலதிக தகவல்களை immi.homeaffairs.gov.auஇல் நீங்கள் பெறலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share
Published 20 December 2022 1:09pm
Updated 20 December 2022 3:02pm
By Charis Chang
Source: SBS


Share this with family and friends