2022-23 ஆம் ஆண்டிற்கான skilled migration திட்டத்தின் கீழ், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு 12,000 விசா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், skilled nominated visas (Subclass) 190 விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகளை அம்மாநில அரசு தளர்த்தியுள்ளது.
குறிப்பாக Subclass 190 விசா விண்ணப்பதாரர்களுக்கான வேலை தொடர்பிலான நிபந்தனைகளையும், minimum point scores நிபந்தனைகளையும் தளர்த்தியுள்ளது.
முன்னதாக 2022-2023 ஆண்டிற்கான skills பட்டியலை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட NSW அரசு, Skilled Nominated Subclass 190 விசா மற்றும் Skilled Work Regional Subclass 491 விசா ஆகியவற்றுக்கான minimum point scores மற்றும் பணி அனுபவத்திற்கான புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியிருந்தது.
இருப்பினும், சமீபத்தில் NSW மாநிலம் வெளியிட்ட புதுப்பிப்பின்படி, Skilled Nominated Subclass 190க்கு இந்த நிபந்தனைகள் இப்போது அகற்றப்பட்டுள்ளன.
"Skilled Independent visa (subclass 189) தற்போது அதிகளவில் கிடைப்பதால், Skilled Nominated Subclass 190க்கு முன்னர் வெளியிடப்பட்ட minimum point scores மற்றும் பணி அனுபவத்திற்கான புதிய நிபந்தனைகள் அகற்றப்பட்டுள்ளன" என்று NSW மாநில அரசின் இணையதளம் கூறுகிறது.
Skilled Nominated visa (subclass 190) என்பது skilled migrants NSW மாநிலத்தில் எங்கும் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற நிரந்தர விசா ஆகும்.
இதேவேளை NSW உட்பட பல ஆஸ்திரேலிய மாநிலங்கள் 2022-23 நிதியாண்டிற்கான skill migration திட்டத்தை, ஆஸ்திரேலியாவிலுள்ளவர்களும் வெளிநாடுகளிலுள்ளவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளன.
விசாக்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல் மற்றும் ஏனைய அனைத்து விவரங்களையும் இல் பெற்றுக்கொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.