இந்தியர்கள் ஆஸ்திரேலியா வந்து பணிபுரிவதற்கான Work and Holiday விசா!

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ், "Work and Holiday" திட்டத்தில் இந்திய இளைஞர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Visa label

Source: AAP

இவ்வாண்டு கைச்சாத்திடப்பட்ட ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், டிசம்பர் 29ம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின்கீழ் இருநாடுகளுக்கும் பல நன்மைகள் ஏற்படவுள்ளநிலையில், இந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆஸ்திரேலியாவின் "Work and Holiday" திட்டத்தில் இந்தியர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
Women backpacking for bushwalking.
Source: Getty / Getty Images/mihailomilovanovic
இதன்கீழ் தொழில் மற்றும் கலாச்சார எல்லைகளை விரிவுபடுத்த விரும்பும் இந்திய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரமுடியும்.

ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள், இந்திய இளைஞர்களுக்கான "Work and Holiday" ஏற்பாட்டை ஆஸ்திரேலியா மேற்கொள்ளும்.

இதன்படி ஆண்டொன்றுக்கு சுமார் 1000 Work and Holiday (subclass 462) விசாக்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கும் எனவும், குறித்த விசா பிரிவின் கீழ் இங்கு வருபவர், சுமார் 12 மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியமுடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
Portrait of a man sitting on rocks in front of huge Boulder and cactus
Portrait of a man sitting on rocks in front of huge Boulder and cactus Source: Moment RF / Mayur Kakade/Getty Images

பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் இந்திய இளைஞர்கள் இந்த விசாவைப் பெறுவதற்கு தகுதிபெறுவர்:

  1. செல்லுபடியாகும் நிலையிலுள்ள இந்திய கடவுச்சீட்டை வைத்திருக்கவேண்டும்;
  2. விசாவிற்கு விண்ணப்பிக்கும்போதும் அதைப் பெற்றுக்கொள்ளும்போதும் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இருக்கவேண்டும்.
  3. இணையவழி விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவேண்டும்.
  4. விசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவேண்டும்.
  5. பன்னிரண்டு மாதங்கள் வரையான விடுமுறை காலப்பகுதியை ஆஸ்திரேலியாவில் கழிக்க உத்தேசித்திருக்க வேண்டும்.
  6. பதினெட்டு (18) வயதிலிருந்து 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
  7. அவரைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுடன் வரமுடியாது.
  8. ஆஸ்திரேலியா வருவதற்கான விமானப் பயணச் சீட்டு, அல்லது அதனை வாங்க போதுமான நிதியை வைத்திருக்க வேண்டும்.
  9. ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க மற்றும்  ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான போதியளவு நிதியை வைத்திருத்தல்.
  10. ஆஸ்திரேலிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கேற்ப health & character நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல்.
  11. ஆஸ்திரேலியாவின் "Work and Holiday" அல்லது "Working Holiday" திட்டத்தில் இதற்கு முன்பு பங்கேற்றிருக்கக்கூடாது.
  12. குறைந்தது இரண்டு வருடங்கள் post-secondary நிலை படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.
  13. போதுமான ஆங்கிலப் புலமை இருக்க வேண்டும்.
Female tourtist taking a photo Sydney Harbour Bridge with her smartphone.
Female tourtist taking a photo Sydney Harbour Bridge with her smartphone. Source: Moment RF / Sutthichai Supapornpasupad/Getty Images

Work and Holiday (subclass 462) விசா வைத்திருப்பவர்கள் பின்வருவனவற்றைச் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்:

  1. விசா வழங்கப்பட்ட நாளிலிருந்து பன்னிரெண்டு (12) மாதங்களுக்குள் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழையலாம்.
  2. முதலாவது நுழைவு தேதியிலிருந்து பன்னிரண்டு (12) மாதங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க வேண்டும்.
  3. 12 மாதங்கள் தங்கியிருக்கும் காலத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பவரலாம்
  4. ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதும், ஊதியம் பெறும் அல்லது ஊதியம் இல்லாத வேலையை மேற்கொள்ளலாம்.
  5. நான்கு மாதங்கள் (17 வாரங்கள்) வரை படிப்பு அல்லது பயிற்சியை மேற்கொள்ளலாம்.
  6. இரண்டாவது மற்றும் மூன்றாவது Work and Holiday (subclass 462) விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெற, 'குறிப்பிடப்பட்ட பணியொன்றை' பரிந்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்கு மேற்கொள்ளுதல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 6 December 2022 4:45pm
Updated 6 December 2022 5:21pm
Source: SBS

Share this with family and friends