நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்களைக் கொண்டுவருபவர்களுக்கு $4440 அபராதம்

ஆஸ்திரேலியாவின் Biosecurity Act 2015 -உயிரியல் பாதுகாப்பு சட்டம் 2015 திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் இச் சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Australia will not renew the biosecurity emergency determination after 17 April

Australia will not renew the biosecurity emergency determination after 17 April Source: Getty / Getty Images

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தங்கள், Biosecurity அச்சுறுத்தல்கள் தொடர்பில் விரைவாக செயல்படுவதற்கு அரசிற்கு உதவும்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின்கீழ், தடைசெய்யப்பட்ட உணவுப்பொருட்கள் உட்பட, உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவிற்குள் எடுத்துவருபவர்கள் மற்றும் அவற்றை பிரகடனம் செய்யத்தவறுபவர்களுக்கான on the spot அபராதம், 4440 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.
மிகக் கடுமையான விதிமீறல்களைச் செய்வோர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 266,400 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படக் கூடும்.

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Biosecurity அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அபராதங்களும் மாற்றியமைக்கப்படுவதாக, வேளாண்மை, மீன்வள மற்றும் வனவியல் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.

“புதிய நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் உயிர் பாதுகாப்பு முறையை வலுப்படுத்தவும், 70.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள விவசாய ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்கவும், விவசாய விநியோகச் சங்கிலி முழுவதும் உள்ள 1.6 மில்லியன் வேலைகளைப் பாதுகாக்கவும், நமது வாழ்க்கை முறையைப் பாதுகாக்கவும் உதவும்" என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"புதிய சட்டத்திருத்தத்தின்படி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்ட பொருட்களை திருட்டுத்தனமாக எடுத்துவருபவர்கள் மற்றும் பிரகடனப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை குறிப்பிடுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அந்த இடத்தில்வைத்து 4440 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் - இது முன்னர் விதிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 2000 டொலர்கள் அதிகமாகும்" எனவும் அமைச்சர் Murray Watt தெரிவித்தார்.
AIRPORT BIOSECURITY SYDNEY
AIRPORT BIOSECURITY SYDNEY Source: AAP / DEAN LEWINS/AAPIMAGE
ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் சில பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவரமுடியாது. அவ்வாறான பொருட்கள் எமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்துறைக்கு அவை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

என்ற இணையத்தளத்தில் ஆஸ்திரேலியாவிற்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும்போது அனைத்து பயணிகளும் Incoming Passenger Card-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். உணவுப் பொருட்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான பொருட்கள் போன்ற உயிரியல் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை declare- பிரகடனப்படுத்த வேண்டும்.

Biosecurity அதிகாரிகள் நீங்கள் பிரகடனம் செய்த பொருட்களை நாட்டுக்குள் அனுமதிக்க முடியுமா இல்லையா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுப்பார்கள்.

ஆபத்தான தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துவருபவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதிகூட சிலவேளைகளில் மறுக்கப்படலாம்.

Foot and Mouth நோய்ப்பரவல் உள்ளிடவற்றின் காரணமாக ஆஸ்திரேலியா தனது Biosecurity பாதுகாப்பை தொடர்ச்சியாக வலுப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 7 December 2022 3:07pm
Updated 7 December 2022 3:27pm
Source: SBS

Share this with family and friends