விசாவை நிராகரித்து பலரை நாடுகடத்த ஆஸ்திரேலிய அரசு கொண்டுவரும் புதிய சட்டம்!

குடிவரவுச் சட்டத்திலுள்ள Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், நாட்டிலுள்ள ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து, அவர்களை நாடுகடத்துவதற்கு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை அரசு வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NSW 491 visa January 2022 ROI submission window is open now

Australian visa in passport Source: SBS

குடிவரவுச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய குடியுரிமை இல்லாதவர், பாரதூரமான குற்றச்செயல் ஒன்றில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, குறைந்தது இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டாலோ, அல்லது 12 மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனையை அனுபவித்த அந்நபர் ஆஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் எனக் கருதப்பட்டாலோ, அவரது விசாவை நிராகரித்து நாடுகடத்தமுடியும்.

குறித்த விடயத்தில் பலரை நாடுகடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் அதிகாரம் தேவைப்படுவதாக குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ள பின்னணியில், இந்த இறுக்கமான குடிவரவு சட்டத்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பதற்கு அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை Migration Amendment (Strengthening the Character Test) Bill என்ற இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்பு மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததையடுத்து  அது கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் தற்போது இப்புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொண்டு, இது குறித்த சட்டமுன்வடிவை  நாடாளுமன்ற ஒப்புதலுக்காக  ஆஸ்திரேலிய அரசு மீண்டும் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்தச்சட்டம்  நிறைவேற்றப்பட்டால், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இச்சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து நாட்டவர்கள் உட்பட புலம்பெயர் பின்னணி கொண்ட பலர் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 15 February 2022 8:54pm
Updated 15 February 2022 9:04pm

Share this with family and friends