உலகில் மக்கள் சந்தோஷமாக வாழ்கின்ற நாடுகளின் புதிய பட்டியல்- World Happiness Report நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து ஆறாவது தடவையாக பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. நியூசிலாந்து 10ம் இடத்தில் உள்ள அதேநேரம் ஆஸ்திரேலியா 12வது இடத்திலுள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டுவரும் இந்த மகிழ்ச்சியான நாடுகள் என்ற பட்டியலுக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பிலான அளவீடுகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி, நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் மற்றும் ஊழலற்ற அரசாட்சி போன்ற விடயங்கள் இவற்றில் சிலவாகும்.
இந்த பட்டியலில் இலங்கை 112 ஆவது இடத்திலும் இந்தியா 126 ஆவது இடத்திலும் உள்ளன. அதேபோல, மலேசியா 55-வது இடத்திலும், சிங்கப்பூர் 25ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தப்பட்டியலின் ஆகக்கடைசியில் 137 ஆவது நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அதற்கு மேலே 136 ஆவது இடத்தில் லெபனான் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:
- Finland
- Denmark
- Iceland
- Israel
- Netherlands
- Sweden
- Norway
- Switzerland
- Luxembourg
- New Zealand
- Austria
- Australia
- Canada
- Ireland
- United States of America
- Germany
- Belgium
- Czechia
- United Kingdom
- Lithuania
112: Sri Lanka
126: India
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.