TPV மற்றும் SHEV வீசாக்களில் உள்ள சுமார் 19,000 அகதிகளுக்கு நிரந்தரம் செய்வதற்கான புதிய பாதையை பெடரல் அரசு அறிவித்துள்ளது. அவர்கள் இப்போது நிரந்தர துணைப்பிரிவு 851 Resolution of Status (RoS) விசாவிற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் சிலர் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அதிக நேரம் காத்திருக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
TPV மற்றும் SHEV வீசாக்கள் வைத்திருக்கும் சுமார் 19,000 அகதிகளின் தலைவிதி அவர்களை RoS விசாவிற்கு விண்ணப்பிக்க அரசு அனுமதித்த பிறகு விரைவில் தீர்மானிக்கப்படக்கூடும். இந்த அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஈரான் (6,513 பேர்) மற்றும் ஆப்கானிஸ்தான் (4,573 பேர்) நாடுகளை சேர்ந்தவர்கள்.

Credit: Department of Home Affairs
மேலும் சிலர் தங்களின் பாதுகாப்பு கோரிக்கைகளை பரிசீலனைக்கான சமர்ப்பித்து விட்டு அதன் முடிவிற்காக Bridging வீசாவில் காத்துள்ளனர்.
எனவே இப்போது விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், நிரந்தர RoS வீசாவை பெறுவதற்கான நடைமுறை என்ன?
எப்போது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
நிரந்தர வீசாவிற்கு தகுதியானவர்களை இரண்டு முக்கிய குழுக்களாக பிரித்து படிப்படியாக பரிசீலிக்கவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1. விண்ணப்பம் பரிசீலனைக்கு சமர்பித்துள்ளவர்கள்: காலாவதியான TPV/SHEV வீசாக்களை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள் அல்லது முதல்முறையாக TPV/SHEV வீசாவிற்கு விண்ணப்பித்தவர்களும் அடங்குவர்.
இந்த நபர்கள் RoS விசாவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கு கூடுதல் தகவலை வழங்கவோ தேவையில்லை.
கூடுதல் தகவல் தேவை என குடிவரவு திணைக்களம் கேட்கும்பட்சத்தில் அல்லது தொடர்பு விவரங்கள் மாறியிருந்தால் மட்டுமே குடிவரவு திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, அவர்களின் தற்போதைய விண்ணப்பங்கள் தானாகவே RoS விண்ணப்பங்களாக மாற்றப்படும்.
2. விண்ணப்பம் எதுவும் பரிசீலனையில் இல்லாதவர்கள்: செல்லுபடியாகும் TPVகள் அல்லது SHEV வீசாவில் உள்ளவர்கள்
செல்லுபடியாகும் TPV/SHEV வீசா வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் தங்களின் ImmiAccount மூலம் இணையம் வழியாக RoS நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
சிலருக்கு மட்டும் அரசு RoS நிரந்தர வீசாவிற்கு விண்ணப்பதை சமர்பிக்கும்படி அழைப்பு அனுப்பும். அழைப்பு வந்த பின் அவர்கள் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
கட்டம் கட்டமாக பரிசீலிப்பதன் மூலம் விண்ணப்பங்கள் காலத்தாமதமின்றி பரிசீலிக்கப்படும் என்றும் மிகவும் தேவைப்படுபவர்களுக்கும் ஆதரவளிப்பதையும் உறுதி செய்யும் என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் SBS Dari - இடம் தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன?
விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பு கோரிக்கைகள் மீள்மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை மற்றும் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இருப்பினும், அவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியம், தேசிய பாதுகாப்பு மற்றும் குணநலன்கள் உட்பட RoS வீசாவிற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரர்கள் தங்கள் உடல்நலப் பதிவுகளை வழங்குமாறு குடிவரவு திணைக்களம் கேட்காது என்றும் ஏற்கனவே உள்ள தரவுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசு விண்ணப்பதாரர்களை போலீஸ் பரிசோதனை சான்றிதழை வழங்குமாறும் கூறாது போலீசிடமிருந்து நேரடியாக சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படும்.
எவ்வளவு காலம் எடுக்கும்?
பெரும்பாலான TPV மற்றும் SHEV வீசாவில் உள்ளவர்களின் RoS வீசா பரிசீலனை முடிவு 12 மாதங்களுக்குள் வழங்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது.
உதவி எங்கே கிடைக்கும்?
RoS விண்ணப்பதாரர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க அரசு இரண்டு ஆண்டுகளில் $9.4 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தில் உள்ள சட்ட சேவை வழங்குநர்களுக்கு நிதி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணங்கள் எதையும் அரசு வசூலிக்காது, மேலும் விண்ணப்பதாரர்களை ஏமாற்ற முயற்சிக்கும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு எச்சரித்துள்ளது.

Credit: SBS Dari
RoS வீசா பெற்ற பிறகு எதற்கெல்லாம் தகுதிகள் உள்ளன?
RoS வீசா வைத்திருப்பவர்கள் இவற்றைச் செய்ய உரிமை உண்டு:
- ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் முடியும்
- மற்றும் போன்ற அரசு சேவைகளை அணுகலாம்
- தேவைப்பட்டால் அணுக முடியும்
- Family visa stream மூலம் நிரந்தர வதிவிடத்திற்கு தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு sponsor செய்யலாம், இருப்பினும் RoS வீசா வைத்திருப்பவர்கள் மனிதாபிமான திட்டத்தின் மூலம் sponsor செய்யவோ அல்லது முன்மொழியவோ முடியாது
- ஐந்து வருடங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து போகலாம்
- தகுதி பெற்ற பிறகு மாற முடியும்
- தகுதி இருப்பின் கலந்து கொள்ளமுடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.