மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகள் அனைவரும் விடுதலை!

மருத்துவ சிகிச்சைக்காக நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு, மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகள் அனைவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

Australia's immigration system used the Park Hotel in Melbourne to detain dozens of refugees.

Australia's immigration system used the Park Hotel in Melbourne to detain dozens of refugees. Source: AP / Hamish Blair

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 20 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 8 பேர் மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் எனவும், இவர்களே அங்கு தடுத்துவைக்கப்பட்ட கடைசி தொகுதியினர் எனவும் Asylum Seeker Resource Centre-இன் தலைமை நிர்வாக அதிகாரி Kon Karapanagiotidis தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர, பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 6 பேர் , மெல்பன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர், விலவூட் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் என மேலும் 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக Kon Karapanagiotidis தெரிவித்துள்ளார்.
நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால், அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கியிருந்த Medevac சட்டம் தற்போது மீளப்பெறப்பட்டுள்ளபின்னணியில், இதன்கீழ் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்ட பல அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹோட்டல்களில் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பிரிஸ்பேனிலும் ஏனையவர்கள் மெல்பன் Park ஹோட்டலிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தநிலையில், இவர்களில் பலர் கட்டம்கட்டமாக bridging விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்தப்பின்னணியில் தற்போது மெல்பன் Park ஹோட்டலில் தடுத்துவைக்கப்பட்ட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 7 April 2022 4:01pm
Updated 7 April 2022 4:11pm

Share this with family and friends