ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து, பப்புவா நியூ கினியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்துவந்த ஏழு அகதிகள் சிறப்பு கூட்டு ஸ்பொன்ஸர் ஏற்பாட்டின் கீழ் கனடாவில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.
மனுஸ் - நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற ஆஸ்திரேலிய அரசின் கடுமையான அறிவிப்பினை அடுத்து, ஆஸ்திரேலிய - கனடிய பொது அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் பல அகதிகள் கனடாவில் குடியமர்த்தப்பட்டுவருகின்றனர்.
படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்று கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முடிவையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்த சுமார் மூவாயிரத்து 127 அகதிகள் மனுஸ் மற்றும் நவுறு தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
ஆஸ்திரேலியாவின் இந்த எல்லை கடந்த அகதிமுகாம்கள் குறித்தும் இதனை நிர்வகிக்கும் பொறிமுறை குறித்தும் மனித உரிமைகள் அமைப்புக்கள் முதற்கொண்டு ஐ.நா. வரை பல அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அதேநேரம் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Turnbull மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோருக்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், சுமார் ஆயிரம் மனுஸ் மற்றும் நவுறு அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இந்தப்பின்னணியில் மீள்குடியமர்வதற்கான வாய்ப்பு எதுவுமின்றி நிர்க்கதியான நிலையில் இருந்த பல அகதிகள், private sponsorship என்ற திட்டத்தின்கீழ் Refugee Council of Australia, MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவில் மீள்குடியேறி வருகின்றனர்.
அகதிகளுக்கான இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறைக்கு அகதிகள் நல அமைப்புக்கள் இதுவரை சுமார் 30 லட்சம் டொலர்கள் திரட்டியுள்ளன.
கோவிட் காரணமாக தாமதமடைந்திருந்த இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறையின் ஊடான மீள்குடியமர்வு திட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.