வாகன விபத்தில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் பலி! இருவர் காயம்!!

Accident

Source: DARREN HOWE/ Bendigoadvertiser

விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்பனிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் - Bendigo பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக்கொண்டு வடக்கு நெடுஞ்சாலையில் Echuca பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வீடோன்றிலிருந்து வெளியே வந்த செடான் ரக காரோடு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக Echuca Highway Patrol Sergeant Paul Nicoll தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் செடான் ரக காரின் ஓட்டுநரான மாணிக்கம் இரட்ணவடிவேல் (வயது 68) அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். இவர்கள் மெல்பனின் Macleod பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் சிறிய காயங்களுடன் Bendigo வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்துக்கு வேகம் காரணமல்ல என்றும் செடான் காரினை ஓட்டியவர் நெடுஞ்சாலையில் வலது பக்கம் திரும்பும்போது, மற்றைய வாகனத்துக்கு இடம்கொடுக்காததே காரணம் என்றும் சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட Sergeant Paul Nicoll கூறினார்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 28 November 2021 9:11am
Updated 28 November 2021 10:07am

Share this with family and friends