தற்போது ஆண்டொன்றுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 160,000 ஆக காணப்படும் நிலையில், அடுத்த ஆண்டுமுதல் இவ்வெண்ணிக்கையை 180,000 முதல் 200,000 வரை அதிகரிக்க அரசு விரும்புகிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி வருடந்தோறும் நிரந்தரமாக குடிபெயர அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் 70 வீதமான இடங்களை skilled migrants-க்கு அரசு ஒதுக்குகிறது.
அந்தவகையில் சுமார் 126,000 முதல் 140,000 இடங்கள் skilled migrants-க்கு ஒதுக்கப்படும் அதேநேரம், அதிக எண்ணிக்கையிலான IT வல்லுனர்கள், முதியோர் நலத்துறை ஊழியர்கள் உட்பட பல தொழிலளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு திறமை அடிப்படையில் நிரந்தரமாக குடியேற வழியேற்படும்.
அதிகமானோரை நாட்டுக்குள் உள்வாங்க ஏதுவாக குடிவரவாளர்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 160,000 என்ற cap-உச்சவரம்பை மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள Jobs and Skills மாநாட்டில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வேலை வழங்குனர்களிடம் அரசு பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவிற்குள் எத்தனை பேர் உள்வாங்கப்படுவார்கள் என்ற புதிய உச்சவரம்பு குறித்த அறிவிப்பு, எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை புள்ளிவிவரவியல் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் தற்போது 480,100 தொழில் வெற்றிடங்கள் உள்ளன. கடந்த 2020 பெப்ரவரியுடன் ஒப்பிடும்போது இது 111.1 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
——————————————————————————————
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.