2022-23 ஆம் ஆண்டிற்கான Skilled migration திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்குமென state nomination இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களுக்கான இடங்களில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலம் Skilled Nominated category (Subclass 190) விசாக்களுக்கு மேலும் 1,400 இடங்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் Skilled Work Regional visa (Subclass 491) ஒதுக்கீடு அதே அளவு குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, விக்டோரியா மாநிலம் 12,900 இடங்களுடன், Subclass 190 விசா வகைக்கான அதிக ஒதுக்கீடுகளைக் கொண்டுள்ளது.
விக்டோரியாவில் Subclass 491க்கு போதுமான nominations இல்லை என்பதால் அந்த இடங்கள் Subclass 190 க்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கலாம் என குடிவரவுத் திணைக்களத்தின் முன்னாள் துணைச் செயலர் அபுல் ரிஸ்வி தெரிவித்தார்.
மாநில அரசுகள் தத்தம் இலக்கை எட்டுவதை உறுதி செய்வதற்காக, நிதியாண்டின் இறுதியில் எல்லா நேரங்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விக்டோரியா 1 ஜூலை 2022 முதல் 31 மார்ச் 2023 வரையான காலப்பகுதியில், Subclass 190 க்கு 9,657 மற்றும் Subclass 491 க்கு 1,852 invitations-ஐ வெளியிட்டுள்ளது.
டாஸ்மேனியா
Subclass 190 nominationsக்கான தேவையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக, டாஸ்மேனியாவிற்கான ஒதுக்கீட்டிலும் இதே போன்ற மாற்றங்களை உள்துறை அமைச்சு செய்துள்ளது.
இதன்படி, டாஸ்மேனியாவின் 2022-23 ஆண்டு ஒதுக்கீடு பின்வருமாறு அமைகிறது:
- Subclass 190 Skilled Nominated visa – 2,150 இடங்கள்
- Subclass 491 Skilled Work Regional visa – 2,100 இடங்கள்
டாஸ்மேனியா 31 மார்ச் 2023 வரையான காலப்பகுதியில், Subclass 190 க்கு 1,433 மற்றும் Subclass 491 க்கு க்கு 1,369 invitations-ஐ வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலும் Subclass 190 க்கு 300 மற்றும் Subclass 491 க்கு 500 என அதன் state-nominated திட்டங்களுக்கு 800 இடங்களைப் பெற்றுள்ளது.
உடல்நலம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கல்வி, பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் வர்த்தகம் போன்ற தொழில் பின்னணி, அல்லது hi-tech/digital, health & life sciences, பசுமை ஆற்றல், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தெற்கு ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
தெற்கு ஆஸ்திரேலியா, Subclass 190 க்கு 2,508 மற்றும் Subclass 491 க்கு 4,725 invitations-ஐ வெளியிட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்