நியூ சவுத்வேல்ஸ் மாநில வீதிகளிலிருந்த Speed camera warning signs-வேக கண்காணிப்பு கமரா முன்னெச்சரிக்கைப் பலகைகள் நீக்கப்பட்டிருந்த பின்னணியில், அவற்றை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mobile Speed கமரா முன்னெச்சரிக்கைப் பலகைகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீக்கப்பட்டதிலிருந்து, வாகன ஓட்டுனர்களினால் மாநிலத்திற்கு கிடைக்கப்பெறும் அபராதம் பலமடங்கு அதிகரித்திருந்த அதேநேரம் அரசின் இந்நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
'இந்த இடத்தில் அல்லது சிறிது தூரத்தில் வேக கண்காணிப்பு கமரா உள்ளது' என்ற முன்னெச்சரிக்கை பலகைகள் காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவற்றைப் பார்த்தவுடன் வாகனத்தின் வேகத்தை குறைக்கிறார்களே தவிர எப்பொழுதும் சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்ற பொறுப்பை உணர்வதில்லை என்றும், இம்முன்னெச்சரிக்கை பலகைகள் வீதி பாதுகாப்பிற்கு எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டிய NSW மாநில போக்குவரத்து துறை, குறித்த முன்னெச்சரிக்கைப் பலகைகளை நீக்கியிருந்தது.
Mobile Speed camera எச்சரிக்கை பலகைகளை நீக்கியபிறகு 40 மில்லியன் டொலர்களை தண்டப்பண வருமானமாக NSW மாநில அரசு பெற்றுள்ளது.
இந்நிலையில் வேக கண்காணிப்பு கமரா முன்னெச்சரிக்கை பலகைகளை NSW அரசு அகற்றியதற்கான காரணம், அபராதங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கே என குற்றம்சாட்டப்பட்டிருந்ததுடன், வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதாயின் அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரை பணிக்கமர்த்துவதே சரியான நகர்வாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் முன்னெச்சரிக்கைப் பலகைகள் மிகவும் அவசியமானவை என்றும், தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற நினைப்பூட்டுதல் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுவதால் அவர்கள் கூடுதல் கவனத்தோடு வாகனம் ஓட்டுவதற்கு இது வழிவகை செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
NSW அரசின் இந்நடவடிக்கை குறித்த எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தொடர்ந்ததையடுத்து, அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.