விக்டோரியாவில் அதிகளவானோர் அகப்பட்ட வேக கண்காணிப்பு கமரா எது தெரியுமா?

Camera

Source: AAP Image/Dave Hunt

விக்டோரியாவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வாகனமோட்டுபவர்களை கண்டுபிடிப்பதற்கென நிறுவப்படும் mobile speed கமராக்கள் ஊடாக கடந்த நிதியாண்டில்  மாத்திரம் மாநில அரசுக்கு 83 மில்லியன் டொலர்களுக்கு மேல்  வருமானம் கிடைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 354,349 அபராதங்களின் ஊடாக இத்தொகை அரசுக்கு கிடைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 7 news பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Great Ocean Road, Lorne-இல்  நிறுவப்பட்ட mobile speed கமராவிலேயே அதிக வாகன ஓட்டுநர்கள் அகப்பட்டிருக்கின்றனர்.

இது உட்பட விக்டோரியாவில் அதிகம் பேர் அகப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலை கீழே காணலாம்.

1. Great Ocean Road, Lorne

2. Black Forest Road, Wyndham Vale

3. Huntingdale Road, Mount Waverly

4. Greensborough Road, Macleod 

5. Stephensons Road, Mount Waverly

இதேவேளை Bell Street, Preston-இல் நிறுவப்பட்ட mobile speed கமரா ஊடாக கடந்த நிதியாண்டில் சுமார் 1802 அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் இதன்மூலம் அரசுக்கு  டொலர்கள் 417,898 வருமானம் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க விக்டோரியாவில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கமராக்கள் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு மில்லியன்கணக்கான  டொலர்கள் வருமானம் கிடைக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன


Share
Published 24 March 2021 3:26pm
Updated 24 March 2021 3:32pm

Share this with family and friends