விக்டோரிய மாநில இளைஞர்கள், கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, Probationary லைசன்ஸைப் பெறுவதற்கான உதவிகளை மாநில அரசு வழங்குகிறது.
Salvation Armyயுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் TAC L2P திட்டம் ஊடாக, தகுதியான இளைஞர்கள் பலன்பெறமுடியுமென விக்டோரிய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, பயிற்சிசெய்வதற்கான கார் மற்றும் மேற்பார்வையிடுவதற்கான ஓட்டுநர்(supervising driver) எவரும் இல்லாத இளைஞர்கள், இந்த TAC L2P திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
எனினும் இதற்கு தகுதிபெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகளை பூர்த்திசெய்ய வேண்டும்:
- 16 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவராக இருத்தல் (சில சூழ்நிலைகளில் 23 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடும்)
- செல்லுபடியாகும் விக்டோரிய லைசன்ஸைக் கொண்டிருக்க வேண்டும்.
- காரோட்டுவதை மேற்பார்வைசெய்வதற்குத் தகுதியான எவரும் இல்லை.
- பொருத்தமான வாகனம் இல்லை.
- ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்.
- வெளிநாட்டு மாணவராக இருக்க முடியாது.
மேற்கூறப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் இரண்டு வழிகளில் இதற்கு விண்ணப்பிக்கலாம்:
- MyVicRoads கணக்கு மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்யலாம்.
- காகித அடிப்படையிலான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுப்பிவைக்கலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.