இதற்கு TRS - Tourist Refund Scheme என்று பெயர். GST -பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் செலுத்தப்பட்ட வரியையும் வைனுக்கு (wine) செலுத்தப்படும் WET -Wine Equalisation Tax என்ற வரியையும், நாட்டை விட்டு வெளியேறுமுன் விமான நிலையத்தில் ஒருவர் பெற்றுக்கொள்ளமுடியும். Customs என்ற சுங்கச்சோதனை பகுதியையும் Duty Free Store என்ற ‘வரியற்ற பொருட்கள்’ விற்பனைசெய்யப்படும் பகுதியையும் கடந்துசென்றால் இதற்கான TRS -Tourist Refund Scheme அமைந்துள்ள அலுவலகம் உள்ளது. இது Australian Border Force அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. வெளிநாட்டுப்பயணிகள் மற்றும் வெளிநாடு செல்லும் ஆஸ்திரேலியர்கள் தாம் செலுத்திய GST மற்றும் WET வரிகளை இங்கு மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருவர் தான் செலுத்திய வரியை திரும்பப் பெறுவது எப்படி?
1. GST உட்பட 300 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு அல்லது அதற்கு கூடுதலான பொருட்களை ஆஸ்திரேலியாவில் ABN Australian Business Number என்ற இலக்கத்தைக் கொண்டுள்ள வர்த்தக நிலையத்திலிருந்து வாங்கியிருக்கவேண்டும். ஒவ்வொரு ரசீதும் 300 டாலர்களுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான ரசீதாக இருக்கவேண்டும்.
2. ரசீது, காகித ரசீதாக -paper receipt ஆக இருக்கவேண்டும். ரசீதில் திகதி இருக்கவேண்டும்.
3. 1000 டாலர்களுக்கு மேற்பட்ட தொகைக்கான ரசீதில், பொருளை வாங்கியவருடைய கடவுச்சீட்டில் உள்ள பெயர் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
4. பொருட்கள் பற்றிய விபரம் ரசீதில் இருக்கவேண்டும்.
5. நாட்டைவிட்டு வெளியேறும் தினத்திற்கு முந்தைய 60 நாட்களுக்குள் இப்பொருட்கள் வாங்கப்பட்டிருக்க வேண்டும்.
6. வாங்கிய பொருட்கள் hand luggage ஆக கையுடன் எடுத்துச்செல்லப்படவேண்டும் அல்லது அவற்றை அணிந்துகொண்டிருக்கவேண்டும். பொருட்களுக்கான ரசீது, கடவுச்சீட்டு, international boarding pass என்பன பொருட்களுடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
7. அந்தப் பொருளை நீங்களே பணம் செலுத்தி வாங்கியிருக்கவேண்டும்.
8. ரசீதுகள் மூலப்பிரதிகளாக -original ஆக இருக்கவேண்டும். Photocopies ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Departure Gate
Hand luggage இல் கொண்டுசெல்லமுடியாத திரவப்பொருட்கள், aerosols, gels மற்றும் கையுடன் கொண்டு செல்லமுடியாத பெரிய பொருட்கள் என்பவற்றை T2 arrivals பகுதியிலுள்ள ABF அலுவலகத்தில் காட்டவேண்டும். அதன்பின்னர் இவற்றை unaccompanied பொதிகளில் வைத்துக்கொள்ளலாம். பின்னர் இதற்கான ரசீதை departure பகுதியிலுள்ள TRS அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
Mobile App மூலமாக refund பெற்றுக்கொள்ளமுடியும் என்று சொல்லப்படுகிறதே?
Mobile app மூலமாக refund பெறமுடியாது. ஆனால் விண்ணப்பத்தைத் துரிதப்படுத்தமுடியும். உங்கள் claim என்ற விண்ணப்பத்தை mobile app மூலமாகச் சமர்ப்பிக்கமுடியும். இதற்கு response ஆக உங்களுக்கு ஒரு QR code வரும். இந்த QR code ஐயும் பொருட்களையும் ரசீதுகளையும் நீங்கள் TRS அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். App மூலமாக விண்ணப்பம் செய்வது, விண்ணப்பத்தைச் submit சமர்ப்பிப்பது ஆகாது. ABF அதிகாரிகளே உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பார்கள்.

Credit: Australian Border Force
ஆஸ்திரேலிய நிரந்தர வதிவாளர் அல்லது குடிமகன்(permanent resident/citizen) tax refund பெற்றபின் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற ஒரு பொருளை திரும்பிவரும்போது நாட்டுக்குள் கொண்டுவரமுடியுமா?
ஆம். கொண்டுவரமுடியும். திரும்பிவரும்போது பயணிகளுக்குத்தரப்படும் IPC என்ற incoming passenger card என்ற அட்டையில் 3ஆவது கேள்வி இது தொடர்பானது. இதில் நீங்கள் பொருளைத் திரும்பவும் கொண்டுவருவது பற்றி declare செய்யவேண்டும்.
Declare- பிரகடனம் செய்யாவிட்டால் அபராதம் உண்டு.
ஏற்கனவே Refund பெறப்பட்ட பொருள் ஒன்றை நாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து declare செய்யும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
வெளிநாடு சென்று திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு ‘passenger concession allowance’ என்று ஒரு வரிச்சலுகையுண்டு. இந்த சலுகை அவர் வேறு என்னென்ன பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகிறார் என்பதைப் பொறுத்தது.
சொந்தப் பயன்பாட்டுக்கான ஆடைகள், காலணிகள், personal hygiene என்ற சுய சுகாதாரம் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவற்றுக்கு வரியில்லை. ஏனைய பொருட்களைப் பொறுத்த அளவில் ஒருபொருள் வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு அதிகமான காலம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு வரி இல்லை. உதாரணமாக ஒரு கமராவை வெளிநாட்டில் வாங்கி அதை ஒருவருடத்திற்கு மேல் வெளிநாட்டில் பயன்படுத்தியிருந்தால் அதற்கு வரி இல்லை.
ஏனைய எல்லாப் பொருட்களுக்கும் வரி உண்டு.

Source: AAP
கொண்டுவரும் மற்ற பொருட்கள் passenger concession allowance தொகையைவிட அதிகமாக இருந்தால் refund பெற்ற GST வரியை திருப்பச்செலுத்தவேண்டும்.
TRS தொடர்பான வேறு கட்டுப்பாடுகள் உள்ளனவா?
ஆம். TRS refund பணமாக/ நோட்டுக்களாக- cash ஆக வழங்கப்படமாட்டாது.
பொருட்களை வேறு ஒருவர் கொண்டு செல்லமுடியாது.
Domestic airport என்ற உள்நாட்டு விமான நிலையங்களில் refund பெறமுடியாது.
புறப்படும் தினத்திற்கு முன்னர் அல்லது பின்னர் refund பெறமுடியாது.
வர்த்தக நோக்கங்களுக்காக கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு refund இல்லை. புகையிலைப் பொருட்களுக்கு அல்லது ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்ட அல்லது ஒருபகுதி பயன்படுத்தப்பட்டவைக்கு இல்லை.
உடலில் பொருத்தப்பட்டுள்ள hair implants, dental implants, breast implants என்பவற்றுக்கு refund இல்லை.
சேவைகளைப் பொறுத்த அளவில் இருப்பிடவசதி, வாடகை வண்டி, tours, car rental, labour charges போன்றவைக்கு refund இல்லை.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.