விமானக் கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தேவையின் வலிமையை இவ்வளவு அதிகமான முன்பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இக்கோடை காலத்தில் பயணம்செய்யவென Qantas, Jetstar மற்றும் Virgin Australia ஆகிய விமானசேவைகளில் ஆஸ்திரேலியாவிற்குள்ளும் வெளியேயும் 12 மில்லியன் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
Qantas குழுமம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எட்டு மில்லியன் மக்களையும், Virgin Australia சுமார் நான்கு மில்லியன் பேரையும் ஏற்றிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு விமான நிறுவனங்களும் கோடை காலத்தில் மேலதிக விமானப்பயணசேவைகளை வழங்குகின்றன.
இவ்விரு விமானசேவை நிறுவனங்களைவிட, ஏனைய விமானநிறுவனங்களையும் சேர்த்தால், இவ்வாண்டு கோடைவிடுமுறையின்போது விமானப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மேலும் பல மில்லியன்களைத்தாண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறு விமானப்பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை கோவிட்டுக்கு முந்தைய அளவை விட குறைவாக உள்ளபோதிலும், புதிய ஆண்டில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.