NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டும் போது ஒரு ஓட்டுநர் பாதணிகளை அணிய வேண்டும் அல்லது அணியாமல் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் தற்போது இல்லை. அதே போன்று என்ன காலணிகள் அணியவேண்டும் என்பதற்கும் எந்த சட்டமும் இல்லை.
இருப்பினும், விபத்து ஏற்பட்டால், விபத்துக்கான காரணம் பொருத்தமற்ற அல்லது காலணிகள் இல்லாதது என்று கண்டறியப்பட்டால், சாலை விதிகள் 2014 விதி 297 வாகனத்தின் சரியான கட்டுப்பாட்டின்றி வாகனம் ஓட்டுதல் என்ற விதியின் கீழ் குற்றமாக பதியப்படலாம். ஆகவே வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற காலணிகளை எப்போதும் அணிந்து வாகனம் ஓட்டுவது அவசியம் என்று NRMA வலியுறுத்துகிறது.
ஹை ஹீல் ஷூக்கள், கனரக வேலை செய்யும் பூட்ஸ், செருப்பு அல்லது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் வேறு ஏதேனும் காலணிகளை அணிவது தவறான யோசனை என தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு நல்ல பிடிப்புடன் இறுக்கமான ஆனால் வசதியாகவும், சூடாக இல்லாமலும் உள்ள சரியாக பொருந்தக்கூடிய ஒரு ஷூவைத் தேர்வு செய்ய வேண்டும் என்று NRMA அறிவுறுத்துகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.