ஒரு திடமான மத அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஆஸ்திரேலியர்கள் தங்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை நீட்டிக்கும் நாளாக Boxing Day உள்ளது.
பெரும்பாலும் குடும்ப பார்பிக்யூக்கள், கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சிட்னியில் இருந்து ஹோபார்ட்டுக்கான படகுப் போட்டி உள்ளிட்டவற்றுக்கான நாளாகவும் இது உள்ளது.
மறுபுறம், பல ஆஸ்திரேலியர்கள் shopping செய்வதற்காக இந்த நாளை எதிர்நோக்குகிறார்கள்.
டிசம்பர் 26ம் திகதி கொண்டாடப்படுகின்ற Boxing Day, ஆஸ்திரேலியாவில் பொது விடுமுறை தினம் என்பது நமக்குத் தெரியும். இந்த நாள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புபடுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் கிறிஸ்மஸுக்கு அடுத்த நாளில், தாங்கள் ஆண்டு முழுமையும் செய்த சேவைகளுக்காக பணியாளர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து பணம் அல்லது பரிசுப்பொருள் அடங்கிய கிறிஸ்மஸ் பெட்டிகளை பெறுவது வழமையாக இருந்தது.
இப்படியாக கிறிஸ்மஸ் பரிசுப்பெட்டியைக் கொடுக்கும் பாரம்பரியம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்கிறார் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் மத ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் Constant Mews.
பின்னர், குறிப்பாக 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, இத்தினம் ஓய்வு, விளையாட்டு மற்றும் புகழ்பெற்ற Boxing Day sales நாளாக மாறியதாக அவர் சொல்கிறார்.

Brian Walker, CEO and Founder of Retail Doctors Group
Boxing Day விற்பனையானது, electronics முதல் ஆடைகள் வரை அனைத்தின் ஊடாகவும் பாரிய லாபமீட்டுவதற்கான வாய்ப்பினை கடைக்காரர்களுக்கு வழங்கும் அதேநேரத்தில், தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பினை வாடிக்கையாளர்களும் பெறுவதாக சொல்கிறார் Retail Doctors Group நிறுவனர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரி Brian Walker.
எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் இருந்து Boxing Day எங்களுடன் பின்னிப்பிணைந்து விட்டதாகவும், பெரிய பல்பொருள் அங்காடிகளின் வளர்ச்சியால் இதன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
Boxing Day என்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியான செயலாகும், குறிப்பாக சில்லறை விற்பனையாளர்களிடம் பேரம் பேசி பொருட்களை வாங்கும் தருணத்திற்காக இவர்கள் காத்திருப்பது வழக்கம். பதிலுக்கு சில்லறை விற்பனையாளர்கள் தம்மிடமுள்ள கையிருப்புகளை விற்றுத்தீர்ப்பதற்காக காத்திருப்பர் என்கிறார் Australian Style Institute நிறுவனர் Lauren Di Bartolo.

MELBOURNE, AUSTRALIA - DECEMBER 26: People shop at Cotton On during the Boxing Day sales at Chadstone the Fashion Capital (Photo by Naomi Rahim/Getty Images) Credit: Naomi Rahim/Getty Images
Boxing Day விற்பனையின் போது முக்கியமான மற்றும் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விற்பனைப் பருவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜனவரி மாத இறுதி வரை தொடரும்.
இக்காலப்பகுதியில் சுமார் 70 பில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியர்கள் செலவிடுவர் என Retail Doctors Group நிறுவனர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரி Brian Walker எதிர்வுகூறுகிறார்.
இதேவேளை Boxing Day அன்று online shopping-இலும் அதிகளவானோர் ஈடுபடுவதால், இதில் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நீங்கள் கடைகளுக்கு சென்று நேரில் shopping செய்ய முடிவு செய்தால், முன்கூட்டியே ஆராய்ச்சி செய்து திட்டமிடுவது உங்கள் நாளை இலகுவாக்குமென Australian Style Institute நிறுவனர் Lauren Di Bartolo சொல்கிறார்.
Australian Style Institute Founder Lauren Di Bartolo
நீங்கள் வாங்கிய பொருள் அதன் விவரிப்புடன் பொருந்தவில்லை என்றால், அல்லது ஏதேனும் பழுதுகள் இருந்தால், அப்பொருளை திருப்பிக்கொடுக்க அல்லது இலவசமாக பழுதுபார்த்துக்கொள்ள, அல்லது அதனை மாற்றுவதற்கு, ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தின் கீழ் உங்களுக்கு உரிமை உண்டு. எனவே உங்கள் பற்றுச்சீட்டுகளை கவனமாக வைத்திருப்பதுடன் இவ்விடயம் தொடர்பில் சில்லறை விற்பனையாளரிடம் பேசுவதற்கு தயங்காதீர்கள் என்கிறார் NSW Fair Trading Commissioner Natasha Mann.
நீங்கள் online-இல் வாங்கியிருந்தாலும் அல்லது நேரடியாக கடையொன்றிலிருந்து வாங்கியிருந்தாலும், உங்களுக்கான நுகர்வோர் உரிமைகளில் பெரியளவில் மாற்றமிருக்காது.
ஆனால் நீங்கள் ஒரு வெளிநாட்டு விற்பனையாளரிடமிருந்து வாங்கியிருந்தால் அது மிகவும் சிக்கலானதாக இருக்கலாம் என Natasha Mann எச்சரிக்கிறார்.

Boxing Day sales are an excellent opportunity for shoppers to grab deals on everything from electronics to clothing - Getty Credit: Diego Fedele/Getty Images
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.