நீங்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடவில்லை என்றாலும்கூட, டிசம்பரில் Santa-வைப் போல் உடையணிந்து Surf Boardஇல் சவாரி செய்யும் ஒருவரைப் பார்க்க நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியர்கள் சில ஐரோப்பிய கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில் தமக்கான தனித்துவமான மரபுகளையும் கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸை கொண்டாட பல வழிகள் உள்ளன.
குறிப்பாக என்னென்ன வழிகளில் ஆஸ்திரேலியர்கள் இந்த பண்டிகை காலத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
கிறிஸ்மஸ் என்பது டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு மத விடுமுறையாகும்.
குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், பரிசு வழங்குதல் மற்றும் மற்றவர்களுடன் அன்பையும் இரக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இதுவாகும்.

Christmas Dinner with Salmon Fish Fillet, Scallops, Lobster, Shrimps and Christmas Cake Credit: GMVozd/Getty Images
அவர்கள் இந்த விடுமுறையை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி, ஓய்வெடுப்பதற்கான மற்றும் விருந்து சாப்பிடுவதற்கான ஒரு வழியாக பார்க்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பொதுவாக டிசம்பர் 25 அன்று மதிய உணவு நேரத்தில் நடக்கும்.
பல ஆஸ்திரேலியர்கள் மத்தியில் இந்நடைமுறை மிகவும் பொதுவானது எனச் சொல்கிறார் பிரிஸ்பேனைச் சேர்ந்த Luke Barbagallo.
கிறிஸ்மஸ் மதிய உணவு மேசையில் கிறிஸ்மஸ் ஹாம், சிற்றுண்டி வகைகள், ஏராளமான கடல் உணவுகள், கிறிஸ்மஸ் puddings, pavlova உட்பட நிறைய பழங்களையும் காணக்கூடிய இருக்கும் என்கிறார் SBS Food நிர்வாக ஆசிரியர் Farah Celjo
இருப்பினும், ஆஸ்திரேலியா பல்கலாச்சாரம் கொண்ட நாடு என்பதால் உங்களது பூர்வீக நாட்டின் உணவுவகை ஒன்றையும் கிறிஸ்மஸ் விருந்து மேசைக்குக் கொண்டு செல்வது நல்ல விடயம் எனவும், இது பலராலும் விரும்பப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Credit: Bec Parsons/Getty Images
கிறிஸ்மஸ் மதிய உணவிற்கு வரும்போது ஒரு உணவைக் கொண்டு வரும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், உங்களுக்குப் பழக்கமான இலகுவான ஒரு உணவுவகையை கொண்டுசெல்லுமாறு SBS Foodஇன் Farah Celjo பரிந்துரைக்கிறார்.
குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய அனுபவம் தனக்கு இல்லை என்றாலும், தனது நண்பர்களின் குடும்பங்களுடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாடிவரும் தான், எப்பொழுதும் ஒரு இலகுவான பொஸ்னிய இனிப்பு வகையைச் செய்துகொண்டு செல்வது வழக்கம் என Farah Celjo சொல்கிறார்.
கோடை விடுமுறை நாட்களில், ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்மஸை வெளியில் கொண்டாடுவதற்கு வெப்பமான காலநிலையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தனக்கும் அது மிகவும் பிடித்தமான ஒன்று எனவும் கடந்த கிறிஸ்மஸின் போது தான் பூங்காவுக்குச் சென்றதாகவும் சொல்கிறார் Pamela López Arriaga.

A family of Indian descent eats Christmas dinner on the patio at home in Australia. Credit: Fly View Productions/Getty Images
Boxing Day test போட்டியை ஒருபோதும் தான் தவறவிடுவதில்லை என்கிறார் Luke Barbagallo.
இப்படியாக கிறிஸ்மஸைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. இதன்மூலம் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை நீங்களும் அனுபவிக்கலாம்.
இதேவேளை ஒவ்வொரு குடும்பத்தையும் பொறுத்து, advent calendars, midnight mass, carols மற்றும் Christmas trees போன்ற இன்னும் பல பாரம்பரியங்களையும் நீங்கள் ஆஸ்திரேலியாவில் காணலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.