ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு மாறி வருகிறதா?

SOLIDARITY RALLY FOR ADASS ISRAEL SYNAGOGUE

MP David Southwick hugs a member of the Jewish community during a community solidarity rally following the arson attack on the Adass Israel Synagogue, Melbourne. Source: AAP / Diego Fedele/AAP Image

ஆனால், இப்போது நாம் காணும் யூத எதிர்ப்பு சம்பவங்களும் தாக்குதல்களும் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


யூத எதிர்ப்பு சம்பவங்கள் 2024ஆம் ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்று Executive Council of Australian Jewry (ECAJ) என்ற ஆஸ்திரேலிய யூத நிர்வாகக் குழு கூறுகிறது.

“அதிகமான துஷ்பிரயோகம், அதிக வெறுப்பு, அதிக விலக்கு, அதிக இழிவுபடுத்துதல் என்பவற்றை யூத சமூகம் அனுபவிக்கிறது” என்றும் “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது அவர்களின் யூத அடையாளத்துடன் தொடர்புடையது” என்றும் அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி Alex Rycvhin கூறினார்.


இதில் எந்த சந்தேகமும் இல்லை, அது இங்கே இருக்கிறது, அது உண்மையானது, மேலும் இந்த நாட்டில் நாம் இதற்கு முன்பு பார்த்திராத அளவுகளை எட்டியுள்ளது
Sarah Bendetsky ரஷ்யாவில் ஒரு யூத குடும்பத்தில் வளர்ந்தார், அங்கு அவர் ஒரு குழந்தையாக யூத எதிர்ப்புக்கு ஆளானதாகக் கூறுகிறார். சமீப காலம் வரை அவர் அதை ஆஸ்திரேலியாவில் அனுபவித்ததில்லை என்று அவர் SBS Examines இடம் கூறினார்.

"2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து வார்த்தைப் பிரயோகங்களும் யூத எதிர்ப்புப் பேச்சுகளாக மாறிவிட்டன, இங்கே, எங்கள் கொல்லைப் புறத்தில் கூட," என்றார் அவர்.
தனது பதின்ம வயது மகள் பாடசாலைக்குச் செல்லும் வழியில் ஒரு அந்நியன் அவளை அணுகி, ‘Hail Hitler' என்று கத்தி, அவள் முகத்தில் Nazi Salute செய்ததாக அவர் கூறினார்.

என்ற தொண்டு நிறுவனத்தை Sarah நடத்தி வருகிறார். சமூகத்தில், தேவை உள்ளவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க உதவுகிறது.

அந்த அமைப்பும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

“எங்கள் அமைப்பின் இலச்சினையில் மெனோரா போன்ற யூத சின்னங்கள் உள்ளன. எங்கள் தொண்டு வாகனத்தில் ஒரு பெரிய இலச்சினை உள்ளது. இரவில் எங்கள் வாகனத்தின் சில்லுகளில் காற்று இறக்கப்பட்டன. சமூக ஊடகங்களில் எம்மீது நிறைய வெறித்தனமான பதிவுகள் இடப்பட்டிருந்தது” என்று கூறிய அவர், “"மெல்பனில் உள்ள ஒரு எளிய சமூக ஹோட்டல், அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த பசியுள்ள மக்களுக்கு உணவளிக்க தனது நிதியை முழுவதுமாக அர்ப்பணிப்பதற்கும், இஸ்ரேலில் நடக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி கேட்டார்.

“இது யூத எதிர்ப்பு மட்டுமே. போர் ஒரு வெறும் மட்டுமே” என்கிறார் Sarah Bendetsky.



இது போன்ற வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகளைப் பார்க்க என்ற இணைய தளத்திற்கு செல்லவும். தமிழ் மொழியில் அறிய, “Available in Other Languages” என்ற பகுதியில் தமிழ் மொழியைத் தெரிவு செய்யவும்.

Share