தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு

GFX 110225 CULTURAL BURNING AUSTRALIA EXPLAINED HEADER.jpg

Fire work on Wunambal Gaambera Country, WA.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நிலத்தைப் பாதுகாத்து நிர்வகித்து வருகின்றனர் என்பதும் அதற்கு நெருப்பை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக் குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு நில மேலாண்மை நடை முறையாகும். உணவுத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காட்டுத்தீ தடுப்பு ஆகியவற்றில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இந்த பண்டைய நடைமுறையின் பின்னணியில் உள்ள சமீபத்திய சான்றுகள் குறித்த நுண்ணறிவுகளை நிபுணர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.


முக்கிய குறிப்புகள்
  • ‘தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்’ என்ற பூர்வீகக் குடிமக்களின் நடைமுறை, காட்டுத்தீயைக் குறைப்பதற்கும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மிகச் சிறப்பான வழி என்ற சிந்தனை இன்று அதிகரித்து வருகிறது.
  • பூர்வீகக் குடி மக்களுக்கு நில உரிமை வழங்கப்பட்டதனால் அவர்களது நிலங்களில் பாரம்பரிய முறையில் தீயைக் கட்டுப்படுத்தும் வழிகளை அவர்கள் மீண்டும் பயன்படுத்த வழி வகுத்துள்ளது. மேலும் அந்த பாரம்பரிய முறைகள் சிறப்பாகச் செயல்படுவதாக சான்றுகள் காட்டுகின்றன.
  • பூர்வீகக் குடிமக்களின் பாரம்பரிய முறைகள் காட்டுத்தீயைக் குறைப்பது மட்டுமல்ல சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
காட்டுத் தீயால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலில் வாழும் நம்மில் பலருக்கு, நெருப்பை அச்சுறுத்தலாகத் தான் பார்க்கலாமேயல்லாமல் வேறு விதத்தில் பார்ப்பது கடினம். 2019 - 20 கோடை காலத்தில் நிகழ்ந்த பேரழிவு மற்றும் சமீபத்தில், 2024 இன் பரவலான, தீவிரமான காட்டுத்தீ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் வேறு என்ன நினைக்க முடியும்?

ஆனால், ஆஸ்திரேலிய கண்டத்தை, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, தீ வடிவமைத்துள்ளது. அத்துடன் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இடையே சமநிலையைப் பேணவும் முக்கிய பங்கு வகித்துள்ளது.

inme56e0ocfv44qprqmgz.png
Wunambal Gaambera Aboriginal Corporation chair Catherine Goonack is among those holding the baton of the fire tradition in Australia today. She learnt cultural burning directly from her ancestors. Photo: Russell Ord for WGAC
தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக் குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு நில மேலாண்மை நடை முறையாகும். இந்த நடைமுறை, பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மையத்தில், நிலத்தில் படர்ந்த புல் மற்றும் திரட்டப்பட்ட எரி பொருட்களை, அகற்ற நெருப்பைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.

“என் தந்தை, ஒவ்வொரு ஆண்டும் உணவை அறுவடை செய்வதற்காக நாங்கள் எரிக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார்.

“‘தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும்' பாரம்பரிய முறை எமது முன்னோர்களின் வழி, ஒரு வாழ்க்கை முறை. அவர்கள் நாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கவும், வளர்ச்சியைக் கொண்டுவரவும், காட்டுத்தீ வருவதைத் தடுக்கவும் நெருப்பைப் பயன்படுத்தினர்,” என்று Wunambal Gaambera Aboriginal Corporation என்ற அமைப்பின் தலைவர் Catherine Goonack கூறுகிறார்.

இந்தப் பாரம்பரிய எரிப்பு முறை (cultural burning), தீக்குச்சி விவசாயம் (firestick farming), அல்லது குளிர் எரிப்பு (cool burning) என்றும் அழைக்கப்படுகிறது. காலனித்துவ ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பிறகும், பல தலைமுறைகளாக, நிலம் கையகப்படுத்தப்படுவதாலும், அதன் விளைவாக பூர்வீகக்குடி மக்கள் தம் அடையாளத்தை இழந்து வருவதாலும், ‘தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும்' முறை சீர்குலைந்துள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா தீ விபத்துகளுக்கு ஆளாகக் கூடியதாகவும், அழிவுகரமான காட்டுத்தீயால் பாதிக்கப்படக் கூடியதாகவும் மாறியதற்கு இதுவே ஒரு காரணம் என்று ்.

“நாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க எரிப்பது முக்கியம் என்பதை எமது முதியோர்கள் அறிவார்கள்,” என்று Catherine Goonack கூறுகிறார்.

2024 ஆம் ஆண்டில், மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்கு Kimberleyயில் தீ நிலைமை எவ்வாறு மேம்பட்டது என்பதை ஆவணப்படுத்தும் ், இதன் விளைவாக பெரிய அளவிலான வழக்கமான பாரம்பரிய எரிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

“காட்டுத்தீயை நிறுத்த கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் கண்காணித்து வருகிறோம். பல ஆண்டுகளாக எங்கள் இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. சில மிகக் கடுமையான காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. இப்போது நாங்கள் மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்குத் திரும்பி விட்டோம் எனலாம்.”

வடக்கு Kimberleyயின் வெப்பமண்டல சமதள வெளியிடத்தில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய கடுமையான காட்டுத்தீயைக் குறைப்பதில் நான்கு பாரம்பரிய உரிமையாளர் குழுக்கள் வெற்றிகரமாக நிர்வகித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
qlhrbgdvvzcyrv23y0nst.png
Skills of assessing the right timing, and how to burn the right way, survive to this day. Fire walk by Jeremy Kowan, Uunguu Ranger and Wunambal Gaambera Traditional Owner. Photo: Mark Jones for WGAC

பாரம்பரிய முறை சிறப்பாக வேலை செய்யும் என்று நிரூபிக்கப்பட்டால், அதை ஏன் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடாது?

பாரம்பரிய உரிமையாளர்களுக்கு நில உரிமைகள் திரும்ப வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரம்பரிய எரிப்பு திட்டங்கள் பிற அங்கீகரிக்கப்பட்ட முறைகளுடன் இயங்க முடிந்த சில இடங்களில் வடக்கு Kimberley பகுதியும் ஒன்றாகும்.

பூர்வீக மக்கள் மண் மீதான உரிமைகளைப் பெற்றது “ஒரு பெரிய திருப்புமுனை” என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரான Tom Vigilante, கூறுகிறார்.

“ஏனென்றால், தாம் விரும்பும் வழியில் நிலத்தை நிர்வகிக்க அவர்கள் உரிமைகளைக் கொண்டிருந்தனர்.

“மாற்றாக தேசிய பூங்காக்கள் அல்லது தீ எரிப்புக்கு அரச நிறுவனங்கள் பொறுப்பேற்கும் பிற வகையான நிலங்கள் இருக்கலாம். பின்னர் அந்த சூழ்நிலைகளில், பூர்வீகக் குடியின மக்கள் அந்தப் பகுதிகளில் எரிப்பு நடக்கும் விதத்தை சீராக்க முயற்சிக்க வேண்டும், ஆனால் அவர்களே அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை.”

Australasian Fire and Emergency Service Authorities Council - ஆஸ்திரேலிய தீயணைப்பு மற்றும் அவசர சேவை அதிகாரிகள் கவுன்சில் – சுருக்கமாக AFAC என்ற அமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட எரித்தலுக்கான தேசிய மேலாளராகப் பணியாற்றுபவர் Trevor Howard.

வடக்கு Kimberleyயின் வெப்பமண்டல சமதள வெளியிட பிராந்தியத்தில் இந்த நேர்மறையான மாற்றம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

“கடந்த 20 ஆண்டுகளில், மிகவும் தீவிரமான, மிகவும் விரிவான காட்டுத்தீயைக் கொண்டிருந்த நிலப்பரப்பிலிருந்து, இப்போது மிகவும் நிர்வகிக்கப்பட்டு, ஆண்டின் சரியான நேரத்தில் குறைந்த தீவிரம், திட்டவட்டமான தீயின் அடிப்படையில் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாக, பூர்வீகக்குடி மக்களால் வழி நடத்தப்பட்டு, அறிவியலால் ஆதரிக்கப்படும் திட்டங்களை இப்போது நடத்துகிறது” என்கிறார் அவர்.


z1m3g1kh3myzpwcl1lcn9.png
Mr Vigilante elaborates on fire management techniques in North Kimberley: “A lot of burning is done by vehicles, some walking in the bush or burning around cultural sites. We also use aircraft because we're looking after close to a million hectares.” Photo: WGAC
ஆனால் பாரம்பரிய எரிப்பு முறையின் மறுமலர்ச்சி இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது என்று Trevor Howard எச்சரிக்கிறார்.

மேலும், ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் இதன் மூலம் எவ்வளவு பயனடையும் என்பது பாரம்பரிய பாதுகாவலர்களுடன் அவர்கள் எவ்வளவு ஈடுபட்டு செயல் படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

“ஏனென்றால் ஆஸ்திரேலியா முழுவதும் ஏராளமான பூர்வீகக்குடி குழுக்கள் உள்ளன, மேலும் அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் தங்கள் உள்ளூர் நாட்டிற்கு அதன் சொந்த பற்றுதலைக் கொண்டுள்ளன. எனவே, ஒவ்வொரு மாநில மற்றும் பிரதேச நிறுவனமும் அந்தக் குழுக்களுடன் இணைந்து அவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவர்களின் சொந்த நாட்டில் அவர்களின் பாரம்பரிய எரிப்பு நடைமுறைகளை வளர்ப்பதில் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.”

நாட்டின் ஆரோக்கியத்தை தீ எவ்வாறு மீட்டெடுக்கிறது

Indigenous Desert Alliance என்ற பூர்வீகக் குடி மக்களின் பாலைவனக் கூட்டணியின், பாலைவன கூட்டாண்மை மேலாளர், Desert Partnerships Manager, Gareth Catt.

Northern Territory, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய இடங்கள் முழுவதும் உள்ள பூர்வீகக் குடி மக்களின் rangers எனப்படும் கண்காணிப்பாளர்களுடன் அவர் 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

அவரது பணியின் பெரும்பகுதி பாரம்பரிய தீ கட்டுப்பாட்டு நடைமுறைகளை நவீன சூழலில் எப்படி ஒருங்கிணைக்கலாம் என்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

காட்டுத்தீக்கு எதிரான, ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறையாக, பூர்வீக மக்கள் தீயினால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதன் வெற்றி, அது நடத்தப்படும் விதத்தில் உள்ளது, நிலப்பரப்பின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது என்று Gareth Catt நம்புகிறார்.

“நான் பணியாற்றிய மக்கள் வானிலை நிலைமைகளைப் பார்த்து, தீ எங்கு செல்லப் போகிறது, அந்த இடத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து, தீயணைப்பு வேலைகளை செய்கிறார்கள்.”

“குறிப்பாக 2019-2020 ஆம் ஆண்டு கோடையில் ஏற்பட்ட பெரிய தீ விபத்துகளுக்குப் பிறகு, பூர்வீகக் குடிமக்கள் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் மேலாண்மையில் உண்மையான ஆர்வம் அதிகரித்துள்ளது” என்று Gareth Catt கூறுகிறார்.

“நெருப்பைப் பற்றி மக்கள் சிந்திக்கும் போது, எஞ்சியிருக்கும் கருமையைப் பற்றியும், அதனுடன் தொடர்புடைய ஆபத்தைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். ஆனால் நெருப்பை நிலப்பரப்பில் கவனமாகப் பயன்படுத்தும் போது, அது ஒரு அழிவு சக்தி அல்ல, அது ஒரு புதுப்பிக்கும் சக்தி. நீங்கள் அந்த நெருப்பை சரியாகக் கணக்கிட்டு, அந்த பெரிய தீ நிகழ்வுகளுக்கு முன்னால் சென்று, நிலப்பரப்புடன் தொடர்ந்து தொடர்பு கொண்டால், நெருப்பு என்பது தாவர பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் புதிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஒரு கருவியாகும்” என்கிறார் அவர்.
Cultural Burning Project.pdj.13.03.24.014.jpg
Joint research by members of the Ulladulla Local Aboriginal Land Council and academics from the University of Wollongong found that cultural burns significantly improve soil quality, allowing more nutrients and microbes to thrive. Photo: Paul Jones (UOW) Credit: pauljones
பரிந்துரைக்கப்பட்ட எரித்தல் - back-burning, controlled burning, அல்லது hazard reduction burning என்று அழைக்கப்படும் முறை, தீ மேலாண்மை முறையாகும், இதில் தீ பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை அடைய குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் வேண்டுமென்றே இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறையைச் சுற்றியுள்ள சமீபத்திய சான்றுகள் குறித்த நுண்ணறிவுகளைப்

பேராசிரியர் Anthony Dosseto பகிர்ந்து கொள்கிறார்.

அரச நிறுவனங்களால் காட்டுத் தீயைக் கையாளும் முறைகள் மேற்கொள்ளப்படும் போது மண் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகளையும் பூர்வீகக் குடிமக்கள் பாரம்பரிய முறையில் முன்னெடுக்கும் எரிப்பு நடை முறைகளையும் யின் பின்னணியில் உள்ள ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர்.

Wollongong பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் Ulladulla உள்ளூர் பூர்வீகக்குடி நில கவுன்சில் உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆய்வு கூட்டாக நடத்தப்பட்டது.

ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலமும் அடர்த்தியைக் குறைப்பதன் மூலமும் இரண்டு வழிகளும் மண்ணில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.

“உதாரணமாக, பாரம்பரிய எரிப்பு நடந்த இடங்களிலுள்ள மண்ணைப் பார்க்கும் போது மண் அடர்த்தியைக் குறைப்பது அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தோம்” என்று பேராசிரியர் Anthony Dosseto விளக்குகிறார்.

“அதே மண்ணில், அரச நிறுவனம் பரிந்துரைத்த எரிப்பு இருந்த மண்ணை விட அதிக கார்பன் மற்றும் நைட்ரஜன் இருப்பதைக் கண்டறிந்தோம். நிச்சயமாக, கார்பன் மற்றும் நைட்ரஜன் மண்ணுக்கு மிக முக்கியமானவை, ஏனெனில் அவை இந்த சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.”

தமது ஆராய்ச்சி முடிவுகள் பரிந்துரைக்கப்பட்ட எரிப்பை, பூர்வீகக் குடிமக்களின் பாரம்பரிய எரிப்புக்கு எதிராகத் தூண்டுவது பற்றியது அல்ல என்கிறார் பேராசிரியர் Anthony Dosseto.

மாறாக, காட்டுத்தீ தணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தில் பூர்வீகக் குடிமக்களின் பாரம்பரிய எரிப்பு முறைகள் வகிக்கும் பங்கு பற்றிய சான்றுகள் மற்றும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தப்படுகிறது - இது பூர்வீகக் குடி மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புரிந்து கொண்ட அறிவு.

“தீ மேலாண்மை நுட்பங்களுக்கான அறிவு எங்களிடம் உள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டைக் கவனித்துக் கொண்டிருக்கும் பூர்வீகக் குடிமக்களின் அறிவை நாங்கள் நீண்ட காலமாகப் புறக்கணித்து வருகிறோம். மேலும், ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளுக்கும் நாங்கள் செய்த ஆய்வைப் பயன்படுத்த பல்வேறு அரச நிறுவனங்கள் நிறைய ஆர்வம் காட்டுகின்றன.”


Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   



Do you have any questions or topic ideas? Send us an email to 



SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share