வானிலை மற்றும் அதன் பருவங்களைப் புரிந்துகொள்வது என்பது பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார அறிவின் ஆழமான அம்சமாகும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது.
விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சிகளை வானிலை வடிவமைக்கிறது, மேலும் இந்த ஒன்றோடொன்றுடனான தொடர்புகளைப் புரிந்துகொள்வது மனித வாழ்க்கைக்கு முக்கியமானது.
'அனைத்து விடயங்களும் இணைக்கப்பட்டுள்ளன' என்பது பூர்வீகக்குடி கலாச்சாரத்தின் மையத் தத்துவமாகும், மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் சுற்றுச்சூழலைக் கவனித்து, காலநிலை, வானிலை, பருவங்கள், விலங்குகள் மற்றும் தாவர வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையே அடிக்கடி நுட்பமான தொடர்புகளைக் கற்றுக்கொண்டனர்.
Moodjar, the native Christmas tree Credit: TerriAnneAllen/Pixabay
ஆஸ்திரேலியாவின் கிழக்கைச் சேர்ந்த Gadigal பெண்மணியான Aunty Joanne Selfe தனது குடும்பம் மற்றும் சமூகத்தின் ஊடாக கடத்தப்பட்ட தகவல்களிலிருந்து வானிலை, பருவங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி அறிந்துகொண்டார்.
வரவிருக்கும் புயல்கள் அல்லது வறட்சி காலங்கள் போன்ற வானிலை நிகழ்வுகள் பற்றிய பூர்வீகக்குடிமக்களின் அறிவு ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் நாம் தப்பிப்பிழைப்பதற்கு முக்கியமானது என்கிறார் Aunty Joanne Selfe.
பூர்வீக்ககுடிமக்களின் வாழ்க்கை பருவங்களுக்கு ஏற்ப நகர்ந்ததாக விளக்குகிறார் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Murdoch University Indigenous Knowledges academic மற்றும் பூர்வீகக்குடி பின்னணிகொண்ட Jordan Ah Chee.
Fire stick farming Credit: Christian Bass/Unsplash
பருவங்களைப் பற்றிய பூர்வீகக்குடிமக்களின் புரிதல் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இது நாட்டையும் நிலப்பரப்பையும் பராமரிப்பதற்கும் பயன்படுகிறது என்கிறார் Aunty Joanne Selfe.
பூர்வீகக்குடிமக்களால் விவரிக்கப்பட்டுள்ள பருவகால சுழற்சிகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள அவர்களின் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கிலுள்ள Noongar தேசத்தில், ஒரு ஆண்டில் ஆறு பருவங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று Birak. டிசம்பர் தொடக்கத்தில் இருந்து கோடைகாலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் இது வெப்பமான வானிலை மற்றும் கொண்டாட்டத்தின் நேரம்.
நிலவு மற்றும் அதன் சுழற்சி மற்றும் ஏனைய வானியல் அம்சங்கள், வரவிருக்கும் வானிலை மாற்றங்களை அடையாளம் காண பூர்வீகக் குடிமக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
A moon halo Credit: Geoffrey Wyatt
பூர்வீகக்குடிமக்கள் வானிலை பற்றிய தமது அறிவை வாய்வழி கதைசொல்லல் மூலமாகவும், பாறை ஓவியங்கள் மற்றும் பாறை செதுக்கல்கள் மூலமாகவும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்திவந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பருவகாலங்கள் நம்பமுடியாத அளவிற்கு வேறுபட்டவை. வெப்பமண்டல பருவமழை, பாலைவன வெப்பம் மற்றும் அல்பைன் குளிர் என ஒவ்வொரு பிராந்தியமும் அதன் தனித்துவமான பருவங்களைக் கொண்டுள்ளது.
பூர்வீகக்குடி சமூகங்களைப்பொறுத்தவரை பருவங்கள் தேதிகளால் வரையறுக்கப்படவில்லை. ஆனால் தாவரங்களும் விலங்குகளும் அவற்றின் சூழலுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை அவர்கள் கூர்ந்து அவதானித்து அதற்கேற்ப செயற்பட்டுள்ளார்கள்.
அவர்களது அறிவு தற்போதுள்ள ஆஸ்திரேலியாவின் நன்கு அறியப்பட்ட நான்கு பருவங்கள் குறித்த நுணுக்கமான புரிதலை நமக்கு வழங்குகிறது.
பூர்வீக கலாச்சாரங்கள் நிலத்துடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும், அவர்களின் அறிவு மற்றும் மரபுகளையும் பாராட்டுவதுடன் அவர்களிடமிருந்து நாம் பல விடயங்களை கற்றுக்கொள்ளலாம்.
For further information about Indigenous weather knowledge, visit:
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.