CONTENT WARNING: கேட்போரை கவலைக்குள்ளாக்கக்கூடிய வன்முறை பற்றிய குறிப்புகள் இந்த நிகழ்ச்சியில் உள்ளன.
Frontier Wars என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். Frontier Wars என்பது ஆஸ்திரேலியாவில் பிரித்தானியர்களின் குடியேற்றத்தின் போது ஏற்பட்ட காலனித்துவ குடியேற்றவாசிகளுக்கும் பூர்வீகக்குடி மக்களுக்கும் இடையிலான, 100 ஆண்டுகளுக்கும் மேலான வன்முறை மோதல்களை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் நடத்தப்பட்ட போர்களில் தனது ஈடுபாட்டை மதிக்கும் ஒரு தேசமாக ஆஸ்திரேலியா இருந்தாலும், Frontier Wars இன்னும் நமது வரலாற்றின் உத்தியோகபூர்வ போர்களாக அங்கீகரிக்கப்படவில்லை.
Frontier conflicts took place across the nation. Source: Supplied
ஆனால் உண்மையில், இந்த தீவுக் கண்டம் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகளின் தாயகமாக இருந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகளுக்கும் பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கும் மோதல்கள் ஆரம்பமாகின.
பிரித்தானியாவிலிருந்து குடியேறியவர்களிடமிருந்து தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் பூர்வீகக்குடி மக்களின் போராட்டத்தின் தன்மையை விவரிக்கும் The Australian Wars தொலைக்காட்சித் தொடரை Arrernte மற்றும் Kalkadoon பெண்ணும் திரைப்படத் தயாரிப்பாளருமான Rachel Perkins 2022 இல் வெளியிட்டிருந்தார்.
ஆஸ்திரேலியப் போர்கள் 1788 இல் குடியேற்றவாசிகளைக்கொண்ட முதல் கப்பல் வருகையிலிருந்து, 1930 களின் நடுப்பகுதி வரை கண்டம் முழுவதும் நடந்தாலும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்த மோதல்கள் பற்றி பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை அல்லது இது ஒரு போராக ஒப்புக் கொள்ளப்படவில்லை.
1966 இல் தான் வரலாற்றைக் கற்பிக்கத் தொடங்கியபோது, வரலாற்றுப் புத்தகங்களில் இந்த மோதல்கள் பற்றி குறிப்பிடப்படவே இல்லை என்கிறார் ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிக்கப்படும் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் Henry Reynolds.
ஏனெனில் இவை கெரில்லா வகை போர்களாக இருந்ததே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.
Rachel Perkins - The Australian Wars Credit: Dylan River/Blackfella Films
ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீக மக்களின் நில உரிமையை பிரித்தானிய சாம்ராஜ்யம் அங்கீகரிக்கத் தவறியது ஒரு வரலாற்று முரண்பாடு என்று வரலாற்றாசிரியர் Dr. Nicholas Clements கூறுகிறார்.
நிலத்திற்கான உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் தோல்வியானது, கொடூரமான இரத்தக்களரிக்கு வழிவகுத்தது.
Eddie Mabo with his legal team. Source: SBS Credit: National Museum of Australia
ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் மட்டும் 400 க்கும் மேற்பட்ட பூர்வீகக்குடியின மூதாதையர்களின் எச்சங்களை தனது சேகரிப்பில் வைத்திருக்கிறது.
உயிர் பிழைத்தவர்களின் சந்ததியினர் அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்கிறார் Rachel Perkins.
A nineteenth century engraving of an aboriginal camp - Marmocchi Source: Getty Source: Getty
இதில் ஐரோப்பியர்கள் வெற்றி பெற பூர்வீக டாஸ்மேனியர்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று சொல்லலாம்.
பூர்வீகக் குடிமக்களுக்கெதிரான வன்முறையில் பெரும்பாலானவை பாலியல் வன்முறைகளாக காணப்பட்டதாகவும் கடத்தல் மிகவும் பொதுவானதாக இருந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பூர்வீகக் குடியினரின் எதிர்ப்பை நசுக்கவென, காலனித்துவவாதிகள் Native Police என்பதை உருவாக்கியதாகவும் இது பயிற்றுவிக்கப்பட்ட துணை ராணுவப் படையாக செயற்பட்டது எனவும் பேராசிரியர் Reynolds விளக்குகிறார்.
Nowhere was resistance to white colonisers greater than from Tasmanian Aboriginal people, but within a generation only a few had survived the Black War. Source: The Conversation / Robert Dowling/National Gallery of Victoria via The Conversation Source: The Conversation / Robert Dowling/National Gallery of Victoria via The Conversation
இந்த வரலாறு அனைத்தையும் Australian Wars ஆவணப்படத் தொடரை உருவாக்கும் போது தான் துல்லியமாக அறிந்துகொண்டதாக சொல்கிறார் Rachel Perkins.
அனைத்து ஆஸ்திரேலியர்களும் அவமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று கூறும் Dr Clements, கடந்தகால அநீதிகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
is available to stream on SBS On Demand in five languages: Simplified Chinese, Arabic, Traditional Chinese, Vietnamese, and Korean. The series is also available with audio descriptions/subtitles for blind or vision-impaired audiences.
This content was first published in September 2022.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.