Closing the Gap என்றால் என்ன?

Happy gardening time with mother and toddler

Indigenous Australian family. Closing the Gap was launched in 2008 to address health and life expectancy inequalities faced by Aboriginal and Torres Strait Islander peoples. Source: Moment RF / Attila Csaszar/Getty Images

Closing the Gap என்பது வாழ்க்கைத் தரம் , உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு அம்சங்களில், பூர்வீகக்குடி பின்னணி கொண்ட மக்களுக்கும் பூர்வீக குடியினர் அல்லாவர்களுக்கும் இடையிலான இடைவெளியைச் சமநிலைப்படுத்தவென வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய ஒப்பந்தமாகும்.


மக்களின் ஆயுட்காலம் அதிகளவாக உள்ள உலகின் முன்னணி நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்றாகும். சராசரியாக, ஆஸ்திரேலியர்கள் சுமார் 83 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர்.

ஆனால் பூர்வீகக்குடிமக்கள் மற்றும் டோரஸ்ட் ஸ்ட்ரெய்ட் தீவு பின்னணிகொண்ட மக்களின் ஆயுட்காலம் சுமார் எட்டு ஆண்டுகள் குறைவாக உள்ளது.

Closing the Gap என்பது இதைப்போன்று வாழ்க்கைத் தரம், உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு அம்சங்களில் பூர்வீகக்குடி பின்னணி கொண்ட மக்களுக்கும் பூர்வீக குடியினர் அல்லாவர்களுக்கும் இடையிலான இடைவெளியைச் சமநிலைப்படுத்தவென வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய ஒப்பந்தமாகும். குறிப்பாக பூர்வீகக்குடி பின்னணிகொண்ட ஆஸ்திரேலியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவது பற்றியது - இதனால் அவர்கள் மற்ற ஆஸ்திரேலியர்களைப் போலவே வாழ்க்கைத் தரத்தையும் வாய்ப்புகளையும் அனுபவிக்க முடியும்.

அப்படியானால் Closing the Gap எப்படி தொடங்கியது? அது என்ன செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது? இப்போது நாம் எங்கே இருக்கிறோம்? என்று பார்ப்போம்.
Stolen Generations Accept Apology From Kevin Rudd On Sorry Day
CANBERRA, AUSTRALIA - FEBRUARY 13: Australian Prime Minister Kevin Rudd meets with Raymattja Marika after delivering an apology to the Aboriginal people for injustices committed over two centuries of white settlement at the Australian Parliament. Rudd's apology referred to the "past mistreatment" of all Aborigines, singling out the "Stolen Generations", the tens of thousands of Aboriginal children taken from their families by governments between 1910 and the early 1970s, in a bid to assimilate them into white society. (Photo by Andrew Sheargold/Getty Images) Credit: Andrew Sheargold/Getty Images
இதற்கான அடித்தளம் 2005-ஆம் ஆண்டு போடப்பட்டது.

பூர்வீகக்குடியின மூப்பர் பேராசிரியர் Tom Calma AO ஒரு முக்கிய சமூக நீதி அறிக்கையை வெளியிட்டபோது. அதில், ஒரு தலைமுறைக்குள் அதாவது- 25 ஆண்டுகளுக்குள் - பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு சமமான சுகாதார நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரது அறிக்கை பலரின் ஆதரவை பெற்றது. ஒலிம்பிக் வீரர்கள் Cathy Freeman மற்றும் Ian Thorpe ஆகியோர் 2007-இல், இதுகுறித்த ஒரு புதிய பிரச்சாரத்தில் இணைந்தனர்.

பின்னர் 2008 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் Kevin Rudd, Closing the Gap செயல்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக்கினார். அதே ஆண்டு, திருடப்பட்ட தலைமுறையினருக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பும் கோரினார்.

ஆயுட்காலம், குழந்தைகள் மத்தியில் காணப்படும் இறப்பு வீதம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்களில் Closing the Gap செயல்திட்டம் கவனம் செலுத்தியது. பத்து ஆண்டுகளுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதே இந்த செயற்திட்டத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், இந்த செயல்திட்டம் எவ்வாறு செல்கிறது என்பதை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை பதவியிலிருந்த பிரதமர்கள் தாக்கல் செய்வது வழக்கம்.

ஆனால் முடிவு திருப்திகரமானதாக இல்லை என்பதாக முன்னாள் பிரதமர் Scott Morrison தெரிவித்தார்.
SCOTT MORRISON CLOSING THE GAP PRESS CONFERENCE
SCOTT MORRISON CLOSING THE GAP PRESS CONFERENCE Credit: AAPIMAGE
2019-இல், முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் மேற்கண்ட உரையை வழங்கியபோது, Closing the Gap மூலத் திட்டம் போதுமானதாக அமையவில்லை என்பது வெளிப்பட்டது. ஏழு இலக்குகளில் வெறும் இரண்டு மட்டுமே சரியான பாதையில் சென்றிருந்ததடன் ஆயள் காலம் தொடர்பில் காணப்பட்ட இடைவெளி மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, Closing the Gap திட்டம் மறுசீரமைக்கப்பட்டது. National Agreement on Closing the Gap என்ற புதிய வடிவத்தை எடுத்து, அரசு மையமாக இல்லாமல், பூர்வீகக்குடி சமூகங்களின் கூட்டு பங்கெடுப்பை மையமாக்கியது.

இதற்காக Coalition of Peaks எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது — இது, 80-க்கும் மேற்பட்ட பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு பின்னணி கொண்ட சமூக அமைப்புகளின் கூட்டமைப்பாகும்.

கொள்கை என்பது ஒரு சமூகத்திற்காக உருவாக்கப்படக்கூடாது; அந்த சமூகத்துடன் இணைந்து உருவாக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் Closing the Gap புதிய தேசிய ஒப்பந்தம், 2031-க்குள் அடைய வேண்டிய 19 இலக்குகளை நிர்ணயித்தது.

இதில், குழந்தைகள் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் பிறக்க வேண்டும்:

மாணவர்கள் முழுமையான கல்வித் திறனை அடைய வேண்டும்:

குற்றவியல் நீதித் துறையால தண்டிக்கப்படுபவர்களில் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்கள் இருக்க வேண்டும்: என்ற இலக்குகளும் அடங்கும்.

பரந்த மற்றும் ஒட்டுமொத்த அணுகுமுறைகளைக் கொண்ட இத்தேசிய ஒப்பந்தத்தில் உடல் நலம் மட்டுமல்லாமல், வீடமைப்பு, நீதிமுறை, பண்பாடு மற்றும் பொருளாதார விடயங்களும் அடக்கப்பட்டன.
MALARNDIRRI MCCARTHY CLOSING THE GAP PRESSER
Lead Convener of the Coalition of Peaks Pat Turner speaks to the media during a press conference at Parliament House in Canberra. Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

இப்போது நிலை என்ன?

பூர்வீகக்குடியின மூப்பர் பேராசிரியர் Tom Calma AO வலியுறுத்திய காலப்புள்ளியில் இருந்து இப்போது ஒரு தலைமுறை கடந்துவிட்டது. ஆயுட்காலம் தொடர்பில் அந்த நேரத்தில் 11 ஆண்டுகளாக இருந்த இடைவெளி, இப்போது எட்டு ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. ஆனால், மீண்டும் அது மோசமான பாதையை நோக்கி செல்லும் அறிகுறிகள் உள்ளன.

இதேவேளை சமீபத்திய Productivity ஆணைய அறிக்கையின்படி, நிர்ணயிக்கப்பட்ட 19 இலக்குகளில் 11-ல் முன்னேற்றம் காணப்படுகிறது

ஆனால் வெறும் ஐந்து இலக்குகளே சரியான பாதையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சில ஊக்கமளிக்கும் அறிகுறிகள் உள்ளன: அதிகமான குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் பிறக்கின்றன, மேலும் அதிகமான இளைஞர்கள் 12 ஆம் ஆண்டு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியை அடைகிறார்கள்.

ஆனால் தற்கொலை விகிதங்கள் மற்றும் சிறைவைக்கப்படும் இளைஞர் விகிதங்கள் ஆகியவை பின்னடைவை சந்திக்கின்றன.

Closing the Gap தேசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நோக்கத்திலிருந்து அது விலகக்கூடாது என சொல்கிறார் Coalition of Peaks அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் Gudanji-Arrernte பெண்மணியுமான Pat Turner.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to [email protected]


Share