ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் coffee வகைகள் தொடர்பில் அறிந்திருக்கிறீர்களா?

Serving coffee

How do you take your coffee? Australia’s coffee culture explained. (Getty) Credit: xavierarnau/Getty Images

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒன்று காபி/Coffee. இங்குள்ள முக்கால்வாசி பேர் தினமும் காபி குடிக்கிறார்கள் என்பதுடன் இது ஒரு கலை வடிவமாகவும் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் பல விதமான காபி தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலியர்கள் காபி வெறியர்கள் என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் மெல்பன் உலகின் காபி தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியர்களில் முக்கால்வாசி பேர் தினமும் காபி குடிக்கிறார்கள். இது இங்கு உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. காபி ஒரு கலை வடிவமாகவும்
கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியர்களில் பலருக்கு பிடித்தது Espresso வகை காபி என்கிறார் மெல்பனில் specialty coffee shopஐ நடத்தும் Lily Fairhall.

இதன் சுவை espresso machineனுடன் தொடங்குகிறது, இதைப் பயன்படுத்தி திறமையான பாரிஸ்டாக்கள் அனைத்து சுவைகளுக்கும் ஏற்றவாறு பல்வேறு வகையான காபி பாணிகளை உருவாக்குகின்றனர்.
Brewing Espresso with Coffee Machine
The long black and latte are Australia’s most popular black and white coffees. (Getty) Source: iStockphoto / Tim Allen/Getty Images
Espresso பெரும்பாலான காபிகளுக்கு அடிப்படையாக அமைகிறது என்கிறார் Map Coffee உரிமையாளர் Coffee master Santo Buccheri.

Espressoவை விட அதிக செறிவூட்டப்பட்ட காபி வகை Ristretto.

இதேவேளை ஆஸ்திரேலியாவின் காபி பிரியர்கள் அதை கருப்பு வெள்ளை எனப் பிரித்து தமது ருசிக்கேற்ப பெற்றுக்கொள்வது வழக்கம்.

Black காபி என்பது பால் இல்லாமல் தயாரிக்கப்படுபவை. Lily Fairhallலின் அனுபவத்தின்படி ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான Black காபி long black.

அடுத்து white காபிகள், espresso baseஉடன், நீராவியைப் பயன்படுத்தி நுரைக்கப்படும் பால் சேர்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் பசுப்பால் மட்டுமே வழங்கப்பட்டது. இப்போது cafeக்களில் சோயா, ஓட்ஸ் மற்றும் பாதாம் பால் போன்றவையும் கிடைக்கின்றன.
Cappuccino art
Cappuccino art. Credit: pixelfit/Getty Images
The café latté அல்லது வெறுமனே 'latté' என்பது பாலுடன் கூடிய காபியாகும், இது ஒரு கிளாஸில் பரிமாறப்படுகிறது.

Piccolo latte என்பது செறிவூட்டப்பட்ட காபியை உருவாக்கும்வகையில் ஒரு சிறிய அளவு பாலுடன் espressoவைக் கொண்டிருக்கும்.

நீங்கள் இனிப்புப் பிரியர் என்றால், சாக்லேட் தூள் தூவப்பட்ட பால் காபி classic cappuccino குடிக்கலாம்.

Piccolo latte போன்று காபியின் செறிவு மிகவும் அதிகமாக இருக்க வேண்டுமென விரும்புபவர்களுக்கென்று மெல்பனில் உள்ளது the Magic காபி

காபி பிரியர்களிடையே பிரபலமாக உள்ள மற்றொன்று macchiato. இது இத்தாலிய மொழியில் 'கறை' என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
Two Smiling Colleagues Making Take Away Coffee Behind The Counter Of A Coffee Shop
Australians are coffee-obsessed, so much so that Melbourne is often called the world's coffee capital. (Getty) Credit: miniseries/Getty Images
Caffeine விரும்பாதவர்களுக்கான ஒரு காபி கூட உள்ளது. caffeine நீக்கப்பட்ட Decaffeinated காபி.

கடந்த 10 ஆண்டுகளில் Decaffeinated காபி வியத்தகு அளவில் மேம்பட்டுள்ளதாக சொல்கிறார் மெல்பனில் specialty coffee shopஐ நடத்தும் Lily Fairhall.

சில கஃபேக்கள் உங்களுக்கு single origin beans அல்லது blend, எதனை அடிப்படையாகக் கொண்ட காபி வேண்டுமென்று கேட்பார்கள். Single origin என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் காபி. காபி பிரியர்கள் தனித்துவமான அனுபவத்திற்காக single originஐ விரும்புவது வழக்கம் எனகிறார் Coffee master Santo Buccheri.
சில சமயங்களில் காபி பிரியர்களிடமிருந்து பாரிஸ்டாக்கள் விநோதமான கோரிக்கைகளைப் பெறுவது வழக்கம் எனவும், அதில் ஒன்று பாதி பாதாம் பாலிலும் பாதி ஓட்ஸ் பாலிலும் செய்யப்பட்ட ஒரு காபிக்கான கோரிக்கை எனவும் நினைவுகூர்கிறார் Lily Fairhall.

நிச்சயமாக நாம் babyccinoவை மறக்க முடியாது, ஒரு சிறிய கோப்பை நுரைத்த பாலுக்குள் சாக்லேட் தூள் தூவப்படுகிறது.

பெரியவர்கள் காபி குடிக்கும் போது சிறு குழந்தைகளை கவர்ந்து வைத்திருக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது, இது காபி-அடிமை வாழ்க்கைக்கு அவர்களை தயார்படுத்துகிறது என்று சிலர் நினைக்கிறார்கள். காலம் தான் பதில் சொல்லும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share