குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச்செல்வது தொடர்பில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் ஆஸ்திரேலியா முன்மாதிரியான நாடாக இருந்தாலும், பல குழந்தைகள் இன்னமும் குறைந்தளவு பாதுகாப்பான முறையில் வாகனங்களில் பயணிக்கின்றனர்.
விபத்து ஏற்பட்டால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கான நடைமுறைகளையும் இதைச்சுற்றியுள்ள சட்டத் தேவைகளையும் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் புரிந்துகொள்வது முக்கியம்.
கார்களில் குழந்தைகளைக் கொண்டுசெல்லும்போது பின்பற்ற வேண்டிய தற்போதைய national child restraint சட்டங்களின்படி, அனைத்து குழந்தைகளும் அவர்களின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு பொருத்தமான child seat-இல் பாதுகாப்பாக அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.
இருப்பினும், ஒரு குழந்தை எப்போதுவரைக்கும் child seat-ஐ பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் குடும்பங்கள் அடிக்கடி குழப்பத்தை எதிர்கொள்கின்றன என்கிறார் மெல்பன் ராயல் சிறுவர் மருத்துவமனையின் director of trauma services இணைப் பேராசிரியர் Warwick Teague.

Associate Professor Warwick Teague Credit: The Royal Children's Hospital Melbourne
ஆஸ்திரேலிய தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் அனைத்து Seatகளிலும் இருக்கும் shoulder markers குழந்தை குறித்த இருக்கையை விட அதிகமாக வளர்ந்துவிட்டதா என்பதைக் கண்டறிய பயன்படுகின்றன.
குழந்தை இந்த shoulder markers-ஐ மிஞ்சும் வரை, அவர்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தத்தொடங்கிய Child Seat-ஐ தொடர்ந்தும் பயன்படுத்தவேண்டியது அவசியம்.
முடிந்தவரை ஒரு குழந்தை அதன் இருக்கையில் வாகனத்தின் பின்பக்கத்தைப் பார்த்தவாறு இருப்பது விபத்து சூழ்நிலையில் அக்குழந்தை காயமடையும் அபாயத்தைக் குறைக்கிறது.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பின்னர்கூட பின்பக்கமாகப் பார்த்தவாறு அமரவைக்க முடியும் என்று இணைப் பேராசிரியர் Warwick Teague கூறுகிறார்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் மூன்றில் இரண்டு child seats சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என Centre for Road Safety நிர்வாக இயக்குநர் Bernard Carlon சுட்டிக்காட்டுகிறார்.
குறித்த child seat தொடர்பில் அதைத் தயாரித்த நிறுவனம் வழங்கிய அறிவுறுத்தல்களை பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அது சிரமமாக இருந்தால் அல்லது குழந்தையின் பாதுகாப்பை அதிகரிக்க விரும்பினால் தொழில்முறை ரீதியாக child seats-ஐ பொருத்தும் சேவைகளைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் ஆலோசனை சொல்கிறார்.

National child restraint laws Credit: ChildCarSeats
டாக்சிகள், வாடகைக்கார் மற்றும் rideshare சேவைகளைப் பயன்படுத்தும் போது, ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே child car restraint சட்டம் மாறுபடும். எனவே, உங்கள் இருப்பிடத்திற்குப் பொருத்தமான குறிப்பிட்ட விதிமுறைகளைப் புரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்வது நல்லது. குறிப்பாக நீங்கள் வாகனத்தை முன்பதிவு செய்யும்போது, child seat உங்களுக்குத் தேவை என்பதை சேவை வழங்குநருக்குத் தெரியப்படுத்தியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை தனது இருக்கையிலிருந்து வெளியேறுவதில் ஆர்வமாக இருக்கலாம். இதனைத் தடுப்பதற்கு, குழந்தை வாகனத்தின் பின்பக்கமாக பார்த்தபடி அமர்தல், அவர்களின் முழங்கால்கள் வசதியாக வளைக்கக்கூடியவாறு இருத்தல் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்வது அவசியம்.
Child seats சரியான முறையில் பொருந்துவதானது கார்களுக்கு இடையே மற்றும் குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடைகளைப் பொறுத்து கூட மாறக்கூடும் என்பதால், குழந்தை சரியான முறையில் அமரவைக்கப்பட்டுள்ளதா என தொடர்ந்து சோதனைகள் மற்றும் சரிசெய்தல்களைச் செய்வது மிகவும் முக்கியமானது.

The obligation is on adults to keep children safe in cars. Credit: MoMo Productions/Getty Images
மேலும் அறிய, கீழே உள்ள உங்கள் மாநில அல்லது பிராந்திய போக்குவரத்து ஆணைய இணையத்தளத்தைப் பார்க்கவும்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.