முக்கிய புள்ளிகள்
- ஒவ்வொரு வாழ்க்கை நிலைக்கும் அரசாங்க கொடுப்பனவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- Centrelink போன்ற திட்டங்கள் மூலம் The Services Australia, அரசு சார்பாகக் கொடுப்பனவுகளை வழங்குகிறது.
- கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு சில கடுமையான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும், மற்றும் சிலவற்றிற்குக் காத்திருப்பு காலத்தைக் கடந்திருக்க வேண்டும்.
- பாதுகாப்பு அல்லது மனிதாபிமான வீசாக்கள் வழங்கப் பட்டவர்களும், மற்ற குடியிருப்பாளர்கள் மற்றும் குடி மக்களைப் போலவே, கொடுப்பனவுகளையும் அணுகலாம்.
The Services Australia என்பது அரசின் சார்பாக தகுதியுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு Centrelink கொடுப்பனவுகளை வழங்கும் நிறுவனமாகும். அவர்கள் Medicare மற்றும் குழந்தை ஆதரவு கொடுப்பனவுகளுக்கும் பொறுப்பாவார்கள்.
“ஆஸ்திரேலியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள்” என்கிறார் Services Australiaவின் பொது மேலாளர் ஹாங்க் ஜோங்கன் கூறுகிறார்.
பெரும்பாலான ஆதரவு கொடுப்பனவுகள் பெறுவதற்கு, அரசின் கடுமையான தகுதி அளவுகோல்களைக் கடக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும்.
உங்கள் தகுதி மற்றும் நீங்கள் எவ்வளவு பெற முடியும் என்பதை மதிப்பிடும் போது உங்கள் வருமானம், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

Disability Support Pension supports people who are prevented from working due to a physical, intellectual or psychiatric condition that is likely to persist for more than two years. Credit: vm/Getty Images
உங்கள் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப கொடுப்பனவு
கிடைக்கக்கூடிய பல கொடுப்பனவுகளை எப்படிப் பெறலாம் என்று கண்டறிவதை சுலபமாக்கும் வகையில், அதன் தகவல்களை அணுகக்கூடிய வகையில் வகைப் படுத்தியுள்ளது.
நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்களுக்கு முழுமையாகத் தெரியாவிட்டாலும், கட்டண வகையைக் கண்டுபிடிப்பது எளிது என்று Hank Jongen கூறுகிறார்.
“ஒருவரின் ‘வாழ்க்கை நிகழ்வுகள்’ என்று அழைப்பதைச் சுற்றி இதை நாங்கள் கட்டமைத்துள்ளோம். ஆறு முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் இதில் அடங்கும்: குழந்தைகளை வளர்ப்பது, வாழ்விட ஏற்பாடுகள், முதுமை, வேலை, கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் இயலாமை. எனவே உங்களைப் பாதிக்கக்கூடும் என்று நீங்கள் நம்பும் எந்தப் பகுதிகளுக்கும் சென்று கிடைக்கக்கூடிய கொடுப்பனவுகளின் வரம்பு, தகுதி விதிகள் மற்றும் அந்தக் கொடுப்பனவுகள் எத்தனை காலப்பகுதியில் கிடைக்கும் என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.
நீங்கள் சமீபத்தில் வந்தவராக இருந்தால், புதிதாக வந்த குடியிருப்பாளரின் காத்திருப்பு காலம் newly arrived resident’s waiting period, சுருக்கமாக (NARWP) முடியும்வரை காத்திருக்க வேண்டும். புதிதாக நாட்டிற்குக் குடி வந்தவர்கள் Centrelink கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
The Services Australiaவின் ஒரு பகுதியாக இயங்கும் Centrelink வழங்கும் சில பொதுவான கொடுப்பனவுகளில் சிலவற்றை இங்கே நாங்கள் பிரித்துள்ளோம்.
வேலை தேடுபவர்களுக்கான JobSeeker கொடுப்பனவு
பலர் உண்மையிலேயே வேலை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் வேலை கிடைக்காமல் போகலாம். அதன் போது, நீங்கள் JobSeeker கொடுப்பனவு பெற தகுதியுடையவராக இருக்கலாம். 22 வயது முதல் ஓய்வூதிய வயதான 67 வயது வரையுள்ள ஒருவர் வேலை தேடுகிறார் என்றால், அவருக்கு வேலை கிடைக்கும் வரை தரப்படும் நிதி உதவி இந்த JobSeeker கொடுப்பனவாகும்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயமடைந்தாலோ, குறுகிய காலத்திற்கு உங்கள் வழக்கமான வேலை அல்லது படிப்பைச் செய்ய முடியாமலோ இருந்தால் இது ஒரு பொருத்தமான கொடுப்பனவாகும்.
நீங்கள் தனியாக வாழ்கிறீர்களா அல்லது ஒரு துணையுடன் – அது திருமணமான அல்லது de facto எனப்படும் நடைமுறை உறவில் வாழ்கிறீர்களா; மற்றும் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்து கொடுப்பனவின் தொகை மாறுபடும்.

JobSeeker Payment is the financial help you can receive if you’re aged between 22 and Age Pension age, which is 67, and looking for work. Credit: courtneyk/Getty Images
Youth Allowance என்ற இளைஞர் கொடுப்பனவு
முழுநேர படிப்பில் அல்லது பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் 24 வயது அல்லது அதற்குக் குறைந்தவர்கள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட வேலை தேடுபவர்கள் இளைஞர் கொடுப்பனவுக்கு தகுதியுடையவராக இருக்கலாம்.
Austudy என்பது 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முழுநேர மாணவர்களை ஆதரிப்பதற்கான ஒரு தனி கொடுப்பனவாகும்.
Family Tax Benefit என்ற குடும்ப வரி சலுகை
ஒருவேளை உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கலாம் அல்லது குறைந்த வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம். Family Tax Benefit என அழைக்கப்படும் குடும்ப வரி சலுகை என்ற அரச ஆதரவை நீங்கள் பெறலாம் என்கிறார் Hank Jongen.
“குடும்ப வரி சலுகை என்பது உண்மையில் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவுவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளின் தொகுப்பாகும். நீங்கள் பெறும் கொடுப்பனவுத் தொகை உண்மையில் உங்கள் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. தம்பதிகளுக்கு வெவ்வேறு விகிதங்கள் உள்ளன, விகிதம் குடும்ப வருமான அளவைப் பொறுத்தது, மேலும் கொடுப்பனவுத் தொகை குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அந்தக் குழந்தைகளின் வயதைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார் அவர்.
Age Pension எனும் முதியோர் ஓய்வூதியம்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசு மக்களுக்கு உதவுகிறது. ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதான 67 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் Age Pension முதியோர் ஓய்வூதியம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவதற்கான வதிவிட விதிகள் மிகவும் சிக்கலானவை. முதியோர் ஓய்வூதியம் பெற நீங்கள் பொதுவாக மொத்தம் குறைந்தது 10 ஆண்டுகள் ஆஸ்திரேலிய குடியிருப்பாளராக இருக்க வேண்டும். மேலும், அதில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் நீங்கள் வசித்த காலப்பகுதியில் எந்த இடையூறும் இருந்திருக்கக்கூடாது.
முதியோர் ஓய்வூதியம் பெற, நீங்கள் பொதுவாக மொத்தம் குறைந்தது 10 ஆண்டுகள் ஆஸ்திரேலிய குடியிருப்பாளராக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டுகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் உங்கள் வசிப்பிடத்தில் எந்த இடைவேளையும் இருந்திருக்கக்கூடாது.Hank Jongen, Services Australia பொது மேலாளர்
தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்குக் கொடுப்பனவு தொகை வேறு பட்டது.

Age Pension is designed to support people who have reached retirement age, which in Australia is 67 years and over. Credit: Fly View Productions/Getty Images
Disability Support Pension என்ற ஊனமுற்றோர் ஆதரவு ஓய்வூதியம்
இயலாமை ஆதரவு ஓய்வூதியம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உடல், அறிவு சார் அல்லது மனநல நிலைமைகளைக் கொண்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கொடுப்பனவாகும்.
இதனைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் கண்டிப்பானவை, அத்துடன், உங்கள் கோரிக்கையை ஆதரிக்க மருத்துவ ஆதாரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
Carer Payment என்ற பராமரிப்பாளர் கொடுப்பனவு
கடுமையான இயலாமை அல்லது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முழுநேர பராமரிப்பு மற்றும் கவனத்தை வழங்குபவர்களை இந்தக் கொடுப்பனவு ஆதரிக்கிறது.
மருந்துச் சீட்டுகளை நிரப்புதல் அல்லது ஒருவரை மருத்துவரை சந்திக்க அழைத்துச் செல்வது போன்ற விஷயங்களை ஈடுகட்ட, கூடுதல் பராமரிப்பாளர் கொடுப்பனவு உதவுகிறது.
வதிவிட உரிமை மற்றும் வீசா நிலமை
ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் Centrelink மூலம் இந்தக் கொடுப்பனவுகளில் ஏதேனும் ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் சமீபத்தில் வந்தவராக இருந்தால், புதிதாக வந்த குடியிருப்பாளரின் காத்திருப்பு காலம் newly arrived resident’s waiting period, சுருக்கமாக (NARWP) முடியும்வரை காத்திருக்க வேண்டும். புதிதாக நாட்டிற்குக் குடி வந்தவர்கள் Centrelink கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
புலம்பெயர்ந்தோர், அகதிகள், புதிதாக வந்த குடியிருப்பாளர்கள் மற்றும் புகலிடம் கோருவோர் என்று எந்த வழியிலாவது நீங்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தால், பொருத்தமான தகவல்களைக் கண்டறிய ‘Moving to Australia’ என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.

Carer Payment is associated with the Disability Support Pension. It supports those who provide full-time care and attention to a person with a severe disability or illness. Credit: BlessedSelections/Getty Images
பாதுகாப்பு அல்லது மனிதாபிமான வீசாக்கள் வழங்கப் பட்டவர்களும், மற்ற குடியிருப்பாளர்கள் மற்றும் குடி மக்களைப் போலவே, Centrelink மற்றும் பிற முக்கிய சேவைகளைப் பெற முடியும்; அதே நேரத்தில் புகலிடம் கோருபவர்களுக்கு Centrelink கொடுப்பனவுகள் கிடைக்காது.Refugee Council of Australia என்ற அமைப்பின் மூத்த கொள்கை அதிகாரி Shaheen Whyte
புகலிடம் கோரும் சிலர் Status Resolution Support Services, அல்லது SRSS என்ற அரசின் நிதியைப் பெற முடியும். வீசாவிற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்தோரை ஆதரிக்கும் இந்த நிதி புகலிடம் கோருபவர்களுக்கும் கிடைக்கும்.
“JobSeeker Centrelink கொடுப்பனவில் அதிகபட்சம் 89 சதவீதமாக வரையறுக்கப்பட்ட அடிப்படை வாழ்க்கை கொடுப்பனவை SRSS வழங்குகிறது. மேலும் அவர்களது வழக்கு தொடர்பான ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளுக்கும் மானியம் வழங்குகிறது” என்று கூறும் Refugee Council of Australia என்ற அமைப்பின் மூத்த கொள்கை அதிகாரி Shaheen Whyte,
“துரதிர்ஷ்டவசமாக, புகலிடம் தேடும் பெரும்பாலான மக்கள் SRSS பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். இந்தத் திட்டம் மிகவும் கடுமையான தகுதி அளவுகோல்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்தத் திட்டத்தில் சேர மக்கள் தங்களுக்கு கடுமையான உடல் அல்லது மனநல நிலை இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று அரசு கோருகிறது” என்கிறார் அவர்.
நீங்கள் எவ்வளவு பணம் பெறுவீர்கள்?
நீங்கள் ஒரு கொடுப்பனவைப் பெற தகுதியானவர், மற்றும் அதற்கான காத்திருப்பு காலங்களை பூர்த்தி செய்திருந்தால், உங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி சூழ்நிலைகளைப் பொறுத்தது.
நீங்கள் எவ்வளவு பெற முடியும் என்பதைக் கண்டறிய, இணையத் தளத்தில், உங்களுடைய வாழ்க்கை நிலைக்குப் பொருத்தமான பக்கத்தில் தேடுங்கள். தற்போதைய கொடுப்பனவுத் தொகை மற்றும் தேவையான காத்திருப்பு காலம் என்பன குறித்தும் இணையத்தளத்தில் சரியான வழிகாட்டல் கிடைக்கும்.
உங்கள் மொழியில் தகவல்
75 க்கும் மேற்பட்ட மொழிகளில் Services Australia தகவலைப் படிக்கலாம், பார்க்கலாம் அல்லது கேட்கலாம். தேடல் பட்டியில் உங்கள் மொழியைத் தேடுங்கள்.
நீங்கள் Services Australiaவுடன் தொடர்பு கொள்ளும் போது, இலவச உரை பெயர்ப்பாளரை Centrelink ஏற்பாடு செய்வதற்கு 13 12 02 என்ற இலக்கத்தை அழைக்கவும்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand