ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவ விரும்புகிறீர்களா? தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வது எப்படி?

Australia Explained: How to Enrol to Vote

Voting is compulsory in Australia, but there are some requirements that you will first need to meet. Credit: David Gray/Bloomberg via Getty Images

மற்றொரு ஃபெடரல் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருப்பதால், முதல் முறையாக வாக்களிப்பதற்கு முன்னர் நீங்கள் சில விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்களைச் சேர்த்துக் கொள்ளவும், நமது தேசத்தை வடிவமைப்பதில் உங்கள் கருத்தைச் சொல்லவும் பல வளங்கள் உள்ளன.


முக்கிய குறிப்புகள்
  • ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாகும், ஆனால் நீங்கள் வாக்களிக்கப் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • ஆஸ்திரேலிய தேர்தல்களில் வாக்களிக்க, நீங்கள் குடியுரிமை பெற்றவராகவும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
  • வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நீங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் அல்லது காகிதப் படிவத்தைப் பயன்படுத்தலாம்.
  • AEC இணையத்தளத்தில் பல மொழிகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன, அத்துடன் எளிதாகப் படிக்கக் கூடிய ஆங்கில வழிகாட்டிகளும் உள்ளன.
ஃபெடரல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது என்பது, ஆஸ்திரேலிய அரசை தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் கருத்தை கூறுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.

ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாகும், ஆனால் வாக்களிப்பதற்கு முன் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய சில தேவைகள் உள்ளன. இவற்றில் ஒன்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தில் (AEC) பதிவு செய்வது.


வாக்காளர் பட்டியலில் சேர எனக்குத் தகுதி இருக்கிறதா?

பெரும்பாலான ஆஸ்திரேலியர்களுக்கு வாக்களிப்பது கட்டாயம் என்றாலும், உங்கள் தகுதியை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

"18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருடைய குடிமகனும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்" என்று, ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் - Australian Electoral Commission அல்லது AEC இன் செய்தித் தொடர்பாளர் விளக்குகிறார்.

"ஆனால் நீங்கள் வாக்களிக்க விரும்பினால், முதலில் வாக்காளர் பட்டியலில் நீங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்."


நான் எப்போது பதிவு செய்ய வேண்டும்?

புதிதாகக் குடியுரிமை பெற்ற அனைவரும் ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகுதான் சேர்க்கை காலக்கெடு பொதுவாக உள்ளது. நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உங்கள் முகவரி அல்லது பெயரில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவும் ஒரு வாரம் உள்ளது.

"ஆனால், தேர்தல் எப்போது நடக்கப் போகிறது என்ற அறிவிப்புக்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை – அதனை இப்போதே நீங்கள் செய்யலாம்," என்று Evan Ekin-Smyth கூறுகிறார்.

உண்மையில், 16 வயதிலிருந்தே நீங்கள் வாக்காளர் பட்டியலில் சேரலாம், இதன் மூலம் நீங்கள் 18 வயதை எட்டியதும் தேர்தலில் வாக்களிக்கத் தயாராக இருப்பீர்கள் என்று AEC துணை தேர்தல் ஆணையர் Kath Gleeson கூறுகிறார்.
Australia Explained: How to Enrol to Vote
MELBOURNE, AUSTRALIA - MAY 18: A view from entrance of a polling station during general elections to elect its parliament and prime minister in Melbourne, Australia on May 18, 2019. Source: Anadolu / Recep Sakar/Anadolu Agency/Getty Images

நான் எப்படிப் பதிவு செய்வது?

“பதிவு செய்வது எளிது, அதைச் செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன,” என்று Kath Gleeson விளக்குகிறார். ஒரு எளிய இணையத்தள படிவத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம். உங்கள் smartphoneஇல் கூட அதைச் செய்யலாம். அதற்கத்திற்குச் செல்லுங்கள்.

உங்களால் இணையத் தளத்தில் படிவத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்றால், காகிதப் பதிவுப் படிவத்தை நிரப்பலாம். எந்தவொரு AEC அலுவலகத்திலும் காகிதப் பதிவுப் படிவங்கள் கிடைக்கும். படிவத்தை அஞ்சலில் பெற 13 23 26 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

பதிவுப் படிவத்தில் சில அடையாள ஆவணங்களை வழங்க வேண்டும். இணையத்தளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முன் இவற்றைத் தயாராக வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தகவலை இணைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதிலிருந்து சில தரவுகளை நீங்கள் பதிய வேண்டியிருக்கும்.

“அடையாளச் சான்று இரண்டு வெவ்வேறு வடிவங்களில் தேவைப்படலாம், இது குறித்த மேலதிக விபரங்கள் எங்கள் ் உள்ளன” என்கிறார் Kath Gleeson.

“பெரும்பாலான மக்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்துகிறார்கள், அத்துடன் நீங்கள் கடவுச்சீட்டு அல்லது Medicare அட்டையையும் பயன்படுத்தலாம்,” என்று அவர் கூறுகிறார்.
Australia Explained: How to Enrol to Vote
A ballot box is seen inside the voting centre at Collingwood in Melbourne, Saturday, October 14, 2023 Credit: CON CHRONIS/AAPIMAGE
“உங்களிடம் அவை எதுவும் இல்லையென்றால், ஏற்கனவே ஃபெடரல் வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவர் உங்கள் அடையாளத்திற்குச் சாட்சியாக இருக்க முடியும்.”

புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் குடியுரிமைச் சான்றிதழையும் பதிவு செய்ய வேண்டும்.

உங்களிடம் எந்த வகையான அடையாள அட்டையும் இல்லையென்றால், அல்லது அது தொலைந்து போயிருந்தால் அல்லது அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தால், அதனை மீண்டும் பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். அடையாள அட்டை வழங்குவதற்கான காத்திருப்பு நேரம் மாறுபடும், சில சந்தர்ப்பங்களில் நான்கு வாரங்கள் வரை எடுக்கலாம்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் நான் பதிவு செய்ய வேண்டுமா?

நீங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்த பின்னர், எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு ஃபெடரல், மாநில அல்லது உள்ளூராட்சி தேர்தலிலும் வாக்களிக்கலாம்.

அதனால்தான் உங்கள் விவரங்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.
Australia Explained: How to Enrol to Vote
Social media, connection and woman typing on a phone for communication, app and chat. Web, search and corporate employee reading a conversation on a mobile, networking and texting on a mobile app Credit: Delmaine Donson/Getty Images

நான் வீடு மாறினால் என்ன செய்வது?

தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு உங்கள் விவரங்கள் தற்போதையவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உங்களுக்கு அவகாசம் உள்ளது.

“உதாரணமாக, நீங்கள் வீடு மாறி விட்டீர்கள் என்று நாங்கள் நம்பும் சில தரவுகளைப் பெற்றால், மக்களுக்கு நினைவூட்டல்களை அனுப்புவோம்,” என்று Evan Ekin-Smyth கூறுகிறார்.

“ஆனால் நீங்கள் வீடு மாறிய போதோ அல்லது உங்கள் பெயரை மாற்றும் போதோ, உங்கள் விவரங்களைப் புதுப்பிப்பது முக்கியம்” என்கிறார் அவர்.

என்ற இணையத் தளத்திற்குச் சென்று உங்கள் தரவுகளை நீங்களே புதுப்பித்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருக்கிறீர்களா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், என்ற இணையத் தளத்திற்கு செல்வதன் மூலம் அல்லது 13 23 26 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அதைக் கண்டறியலாம்.

பதிவு செய்ய எனக்கு யார் உதவ முடியும்?

வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான தகுதி என்ன என்பது குறித்தும், எப்படி சேரலாம் என்ற வழிகாட்டுதல்களும் AECயின் இணையத் தளத்தில் உள்ளன. அவை உங்கள் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு தொலைபேசி மொழிபெயர்ப்பாளர் சேவை மற்றும் விளக்கப் படங்களுடன் எளிதாகப் புரியக் கூடிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 'இலகு வழிகாட்டிகள்' என்பன அங்கே கிடைக்கின்றன.

புதிய வாக்காளர்களுக்கு உதவ Migrant Resource Centres என்ற புலம்பெயர்ந்தோர் வள மையங்கள் மற்றும் பிற உள்ளூர் பன்முக கலாச்சார ஆதரவு சேவைகள் உள்ளன. அவை வாக்காளர் பட்டியலில் புதிதாக ஒருவர் இணைவதற்கு பதிவு செய்ய உதவுகின்றன.

நான் வாக்களிக்கப் பதிவு செய்யாவிட்டால் என்ன செய்வது?

ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயம், வாக்களிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். ஆனால், நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கும் அப்பால், நீங்கள் பதிவு செய்யாவிட்டால் ஆஸ்திரேலிய அரசியலில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கத் தவற விடுவீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்று Evan Ekin-Smyth கூறுகிறார்.

2025 ஃபெடரல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சரியான நேரத்தில் வாக்களிக்கப் பதிவு செய்ய என்ற இணையத் தளத்திற்கு அல்லது உங்களுக்கு அருகிலுள்ள AEC பணிமனைக்குச் செல்லவும்.


ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Want to help shape Australia’s future? Here’s how to enrol to vote


With another federal election due this year, there are steps you will need to take before casting your vote for the first time. Plenty of resources are available to help you enrol to vote and have your say in shaping our nation.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 




Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.

Do you have any questions or topic ideas? Send us an email to [email protected]

Share