ஆஸ்திரேலியாவானது வெவ்வேறு காலநிலை மண்டலங்கள், மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் கணிசமான மாறுபாடுகளைக் கொண்ட வறண்ட கண்டமாகும்.
வடக்கிலிருந்து தெற்கு வரை, வெப்பமண்டல சூறாவளிகள், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி ஆகியவை உட்பட பல தீவிர வானிலைகளை ஆஸ்திரேலியா அனுபவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் காலநிலை அதன் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை வடிவமைக்கிறது. காலநிலை மாற்றம், காட்டுத்தீ மற்றும் வறட்சி ஆகியவை இக் கட்டமைப்புகளை மேலும் அச்சுறுத்துகின்ற பின்னணியில் அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமாகும்.
The stark landscape of the Monaro Tablelands which is one of 19 ecosystems collapsing in Australia - Image Greening Australia. Credit: Annette Ruzicka
"நான் வெயிலில் எரிந்த இந்த நாட்டை நேசிக்கிறேன், பரந்த சமவெளிகள், மலைத்தொடர்கள், வறட்சி மற்றும் வெள்ளத்தைக் கொண்டுவரும் மழை ஆகியவற்றைக் கொண்ட நாடு இது" என்பதாக ஆஸ்திரேலியக் கவிஞர் 1900-களின் முற்பகுதியில், எழுதிய புகழ்பெற்ற My Country என்ற கவிதை இந்த பரந்த பழுப்பு நிலத்தின் அழகை விவரிக்கிறது.
ஆஸ்திரேலியா பற்றிய இந்த வர்ணனை இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது.
மழை, வெள்ளம், வரட்சி காட்டுத்தீ என ஆஸ்திரேலியர்கள் அனுபவிக்கக்கூடிய சில தீவிர வானிலை நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த Catherine Ganter, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளே ஆஸ்திரேலியா அனுபவிக்கக்கூடிய பலதரப்பட்ட வானிலைகளுக்குக் காரணம் எனவும் அவர் சொல்கிறார்.

Australian climate zones based on temperature and humidity - credit BOM.png
இந்த காலநிலை மண்டலங்களை வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், தாவரங்கள் மற்றும் பருவகால மழைப்பொழிவு ஆகியவற்றின் மாறுபாடுகளால் வகைப்படுத்தலாம். ஆஸ்திரேலியாவின் வானிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன.
சுற்றுச்சூழலைப் பற்றிய நுணுக்கமான புரிதலைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் ஆஸ்திரேலியாவில் தமது இருப்பிடத்தின் அடிப்படையில் வெவ்வேறு பருவகால நாட்காட்டிகளை அங்கீகரித்துள்ளனர்.

Lake Keepit in New South Wales - Image Wallula-Pixabay
நீர் கையிருப்பு மற்றும் வறட்சி ஆகியன நாட்டின் விவசாயம், சமூகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
உலகிலேயே மக்கள் வசிக்கும் கண்டங்களில் மிகவும் வறண்ட கண்டம் ஆஸ்திரேலியாவாகும். இருப்பினும் இதன் பல்லுயிர்வகைமை நீர் சமநிலையை நிர்வகிக்கும் வகையில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார் Greening ஆஸ்திரேலியாவின் Director of Impact Dr Blair Parsons.

Seasonal rainfall zones of Australia - credit BOM.
Great Barrier Reef உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும் மற்றும் பூமியின் மிகப்பெரிய பவளப்பாறை ஆகும்.
அசுத்தமான நீர் Great Barrier Reef-இன் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.
உலகின் பல்லுயிர்வகைமையில் ஆஸ்திரேலியா 10 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பாலானவை உலகில் வேறு எங்கும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் தனித்துவமான உயிரினங்கள் ஆகும். இருப்பினும் இவற்றில் பல அழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பாக னுச டீடயசை Pயசளழளெ சுட்டிக்காட்டுகிறார்.

Coral on the Great Barrier Reef - Image Greening Australia
ஆனால் தனிநபர்களாக நாமும் மாற்றங்களை உருவாக்குவதில் உதவலாம். உதாரணமாக நீரை கவனமாகப் பயன்படுத்துதல், வறட்சியைத் தாங்கும் விவசாய முறைகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை Dr Blair Parsons வலியுறுத்துகிறார்.
ஆஸ்திரேலியாவின் தீவிர வானிலை நிகழ்வுகள் மக்களுக்கும் நாட்டின் உட்கட்டமைப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன, எனவே தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாரா இருப்பது முக்கியம் என்கிறார் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த Catherine Ganter.

Catherine Ganter is a senior climatologist at the Bureau of Meteorology - Image BOM. Dr Blair Parsons is the Director of Impact at Greening Australia - Image Greening Australia.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.