ஆஸ்திரேலியா கண்கவர் கடற்கரைகளை மாத்திரமல்ல அதற்குள் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டுள்ளதால் இதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் தொடர்பில் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
குறிப்பாக jellyfish, stingrays மற்றும் பல ஆபத்தான சுறா இனங்களைக் குறிப்பிடலாம்.
அந்தவகையில் நாம் கடலில் நீந்தும்போது சுறா வகைகளைச் சந்தித்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பார்ப்போம்.
சுறா இனங்களை எடுத்துக்கொண்டால் Great White Shark, Tiger Shark, Hammerhead Shark, Bull Shark மற்றும் பல்வேறு reef சுறா இனங்கள் உள்ளன.

A shark seen from the Surf Life Saving aerial surveillance helicopter – Image: Surf Life Saving Australia.
சுறாக்களின் நடத்தை மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் புரிந்துகொள்வது கடற்கரை பயணங்களின் போது சுறாக்களால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
நியூ சவுத் வேல்ஸ் கடற்கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் வரை வெள்ளை சுறாக்கள் காணப்படலாம் எனவும் அக்டோபர் முதல் மே வரை bull sharksஉம், tiger sharksஐ ஆண்டின் எந்த நேரத்திலும் காண முடியும் என்றும் Dr. Paul Butcher கூறுகிறார்.
சுறாக்களால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க சில முக்கியமான கடற்கரை பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

Dr Paul Butcher – Image: New South Wales Department of Primary Industries.
இதை ஆமோதிக்கும் சூழலியல் நிபுணர் மற்றும் கடற்கரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் Dr Jaz Lawes சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளுக்கு இடையே உள்ள கண்காணிப்புப் பகுதி கடற்கரையின் பாதுகாப்பான பகுதி என்கிறார்.
நீங்கள் கடலில் இருக்கும் போது, ஒரு சுறா உங்களை அணுகினால் அதன் நடத்தையை அவதானித்து அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை அமைதியாக கடந்துவிடும் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் பதட்டமான அசைவுகள் அல்லது பிற ஒழுங்கற்ற நடத்தைகளை வெளிப்படுத்தினால், முடிந்தவரை விரைவாகவும் அமைதியாகவும் தண்ணீரை விட்டு வெளியேற வேண்டும்.

Lifesavers on patrol at the beach – Image: Surf Life Saving Australia.
சுறாக்கள் அருகில் வருவதைத் தடுக்க உதவும் உபகரணங்களை அணிந்துகொள்வது உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் தண்ணீரில் இறங்குவதற்கு முன் மேற்கொள்ளலாம்.
அதேநேரம் நீங்கள் நீந்த அல்லது surf செய்ய உத்தேசித்துள்ள கடற்கரை பற்றிய தகவலை முன்கூட்டியே கண்டறிந்து அந்த கடற்கரையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் திட்டமிடுவது அவசியம் என்கிறார் Dr Jaz Lawes.

Impact ecologist and beach safety researcher Dr Jaz Lawes from Surf Life Saving Australia – Image: Surf Life Saving Australia.
இது ஒருபுறமிருக்க ஆஸ்திரேலியாவின் சில மாநில மற்றும் பிராந்திய அரசுகள் சுறா தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கவென கண்காணிப்பு திட்டங்கள் மற்றும் சுறா வலைகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளைக் கொண்டுள்ளன.
அதில் முக்கியமான ஒன்று நியூ சவுத் வேல்ஸ் அரசின் shark tagging திட்டம். இதன் மூலம் tag செய்யப்பட்ட சுறாக்கள் தண்ணீரில் இருந்தால் கடற்கரைக்குச் செல்பவர்கள் அதுகுறித்த real time எச்சரிக்கைகளைப் பெற முடியும் என்று Dr. Paul Butcher விளக்குகிறார்.

It is crucial to be prepared and know how to respond in case of a shark encounter in the water. Source: Moment RF / Khaichuin Sim/Getty Images
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.