உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான தனியார் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது எப்படி?

Great School Work

Choosing the right tutor is essential for ensuring a positive learning experience and real educational benefits for your child. Credit: SolStock/Getty Images

தனியார் பயிற்சி என்பது இந் நாட்டில் ஒரு பெரிய, மற்றும் வளர்ந்து வரும் துறையாகும், நாடு முழுவதும் 80,000ற்கும் மேற்பட்ட தனியார் பயிற்சியாளர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும்பாலும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்காக அதிக பணம் செலவு செய்கின்றன. வெற்றிக்கான திறவுகோலாகக் கல்வியை அவர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மையிலேயே பயனடையவும் நேர்மறையான அனுபவத்தை உருவாக்கவும், உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான ஒரு தனியார் பயிற்சியாளரைக் கண்டுபிடிப்பது மிக அவசியம்.


ஆஸ்திரேலியாவில் வாழும் பல புலம்பெயர்ந்த குடும்பங்களைப் போலவே, Jieh-Yung Loவின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பாடசாலை மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்க்கக் கடுமையாக உழைத்தார்கள்.

“நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் நண்பர்கள் பலர் தனியார் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றனர். அதனை அறிந்த எனது பெற்றோர், அப்படி நானும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாவிட்டால் பின்தங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். அதுதான் என்னையும் அப்படியான வகுப்புகளில் சேர்ப்பதற்கான முதன்மையான காரணிகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். நான் சனிக்கிழமை வகுப்புகளுக்குச் சென்றேன். கணித வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை, அவை தவிர, எனக்கு தனிப்பட்ட பயிற்சி வகுப்புகளும் இருந்தன! நான் விளையாட்டில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று என் பெற்றோர் மிகவும் ஆர்வமாக இருந்தனர், ஆனால் என் மதிப்பெண்கள் குறையக்கூடாது என்று என் பெற்றோர் மிகவும் ஆர்வமாக இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

இப்போது ஒரு பெற்றோராக, அவர் தனது ஏழு வயது மகள் ஹோப்லினுக்குப் (Hopelyn) பயிற்சி அளிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறார், ஆனால் அதை வித்தியாசமாக அணுகுகிறார் அவர். “இந்த கட்டத்தில், குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தில், அவளுக்கு முழு கல்வி அனுபவத்தையும் கற்றலில் ஆர்வத்தையும் அதிகரிக்க, அவளுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குவதன் மூலம், குறிப்பாக பயிற்சி அளிப்பதன் மூலம், அவளுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய பாதுகாப்பான இடத்தை நாங்கள் தேடுகிறோம்” என்றார் Jieh-Yung Lo.

பெற்றோர் ஏன் தனியார் பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள்?

பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றோர் தனியார் பயிற்சி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள்: , குறிப்பிட்ட பாடங்களில் அவர்கள் திறமையை மேம்படுத்த அல்லது தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுவதற்காக என்று பல காரணங்கள் இருக்கலாம்.

மற்றைய சிலர், முழுமையான கல்விக்காகத் தனியார் பயிற்சியை நாடுகிறார்கள்.

Selective schools என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கும் தனியார் பயிற்சி பயன்படுத்தப்படுகிறது என்று - ஆஸ்திரேலிய தனியார் பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mohan Dhall கூறுகிறார்.

“ஒரு பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற, ஒரு தொழில்துறையில் வேலை எடுப்பதை உறுதி செய்ய பலர் தனியார் பயிற்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பாடசாலைப் படிப்பு மட்டத்தில், அது ஒரு தனியார் பாடசாலை அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரச பாடசாலையில் சேர அவை உதவுகின்றன. மேலும் அந்தப் பாடசாலைகளில் சேர்வதற்குப் புலம்பெயர்ந்த குடும்பங்களிடையே அதிக அளவு ஆர்வம் காட்டப்படுகிறது,” என்று அவர் விளக்குகிறார்.

Aboriginal primary school teacher helping young boy in the classroom
Tutoring comes in various formats, from in-person to online, and can serve different purposes, including academic improvement and confidence-building. Credit: JohnnyGreig/Getty Images

எந்த மாதிரியான பயிற்சி முறைகள் இருக்கின்றன?

தனியார் பயிற்சி வகுப்புகள் பல வடிவங்களில் வருகிறது: , தனியார் பயிற்சி வகுப்பு மையங்களில் அல்லது இணைய வழியாக Onlineனில்.

சில ஆசிரியர்கள் தனியொரு மாணவர் மீது கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்கள் குழுக்களாக மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்கள். பொதுவான homework help என்று வீட்டில் செய்து வர வேண்டிய விடயங்களுக்கு உதவி என்பதிலிருந்து தீவிரமாகத் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்தல் வரை பல சேவைகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில் , யார் வேண்டுமானாலும் பயிற்சி அளிக்கலாம். ஒரு மாணவர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதால் மட்டும் அவரது தனியார் பயிற்சியாளர் ஒரு நல்ல கல்வியாளராக இருப்பார்கள் என்று கூறமுடியாது என்று Mohan Dhall எச்சரிக்கிறார்.

“புலம்பெயர்ந்தவர்கள் உண்மையில் தங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், கற்றுக்கொள்ளும் திறன் குறைந்தவர்களாகவும் மாற்ற முடியும் என்று நான் வாதிடுவேன், ஏனெனில் அவர்களில் பலர் தமது தேவைகளை அடையாளம் காணத் தகுதியற்றவர்,” என்று அவர் கூறுகிறார்.

ஒரு பயிற்சியாளரை எவ்வாறு தேர்வு செய்வது?

மற்றைய பெற்றோரின் பரிந்துரைகள் ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாகும்.

ஆஸ்திரேலிய த்தில் உறுப்பினராக இருக்கும் ஒரு ஆசிரியர் கடுமையான தரநிலைகளை பூர்த்தி செய்து நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டவராக இருப்பார் என்பதால் அப்படியான ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க பல ஆஸ்திரேலிய மாநிலங்கள் பரிந்துரைக்கின்றன.

ஒரு ஆசிரியரை பணியமர்த்துவதற்கு முன் களைக் கேட்க வேண்டுமென Mohan Dhall அறிவுறுத்துகிறார், அவையாவன:

  • உங்கள் தகுதிகள் மற்றும் அனுபவம் என்ன?
  • குழந்தைகளுடன் பணிபுரிவதற்கான அனுமதி பெற்றுள்ளீர்களா?
  • உங்களிடம் வணிக எண் உள்ளதா?
  • பற்றுச்சீட்டு கொடுப்பீர்களா?
  • பணத்தை நீங்கள் திரும்பக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது எவ்வாறு வழங்கப்படும்?
  • உங்கள் பயிற்சியின் வெற்றியை நீங்கள் எதை வைத்து அளவிடுவீர்கள், அதற்கான சான்றுகள் ஏதாவது இருக்கிறதா?
  • எவ்வளவு காலத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?
  • உங்கள் வகுப்புகளில் எத்தனை மாணவர்கள் இருப்பார்கள்?
  • நீங்கள் வழங்கும் பயிற்சி மாணவருக்குத் தனித்துவமானதா?
  • நீங்கள் வழங்கும் பயிற்சி என் குழந்தைக்குப் பயனளிக்கவில்லை என்றால், அதை எப்போது, எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

Mother helping son during e-learning at home
Mother helping son during e-learning at home. Credit: MoMo Productions/Getty Images
குழந்தைகளுடன் பணிபுரியும் சான்றுகள் இல்லாத, கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் அல்லது பொறுப்பைத் தவிர்க்கும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும் இணைய வழியாகப் பயிற்சி வழங்குவோர் உங்கள் குழந்தையுடன் ஈடுபாட்டுடன் கற்றுக் கொடுக்கிறாரா என்பதை உறுதிசெய்யுமாறும் Mohan Dhall பரிந்துரைக்கிறார்.

“கேமராக்கள் இயங்குகின்றனவா? மாணவர்கள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கிறார்களா? பயிற்சியாளர் மாணவர்களின் பட்டியலை வைத்து அவர்கள் எப்படி பங்களிப்பு செய்கிறார்கள் என்பதைச் சரி பார்க்கிறார்களா? மாணவர்களின் ‘அரட்டை’ பகுதியில் என்ன நடக்கிறது என்பதை சரி பார்க்கிறார்களா? கொடுத்த வேலையை மாணவர்கள் முடித்ததை அவர்கள் உறுதி செய்கிறார்கள்? அவர்கள் எப்படியான பின்னூட்டலை வழங்குகிறார்கள்?” என்பதை ஆராயும் படி அவர் கூறுகிறார்.

மெல்பன் நகரில் வாழும் Jieh-Yung Lo, தனது மகளுக்கு ஒரு தனியார் பயிற்சி ஆசிரியரைத் தேர்வு செய்வதில் அவளையும் ஈடுபடுத்துவது மிக முக்கியம் என்கிறார்.

இதேபோல், பிரிஸ்பன் நகரில் வசிக்கும் Alex Wong, தனது மகளுக்கு நேரில் வந்தும், மற்றும் இணைய வழியாகவும் தனியார் பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்திருக்கிறார். ஒரு தனியார் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் அவரும் இதே வழியைப் பின்பற்றுகிறார்.

“எங்கள் மகள் எப்படி பதிலளித்தாள் என்பதன் அடிப்படையில் நாங்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவள் சலிப்படைந்தாளா, பதட்டமாக இருந்தாளா, கவனம் செலுத்தவில்லையா, அல்லது உண்மையில் 'ஓ வாவ்' என்று சொல்லி மேலும் கேட்டாளா. எதைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான ஒரு அளவுகோலாக அது இருந்தது,”என்று அவர் கூறுகிறார்.
Female tutor explaining to boy through book on table at home
Since tutoring is unregulated in Australia, parents should carefully vet tutors by checking their credentials, experience, and teaching methods. Credit: Westend61/Getty Images/Westend61

இலவச மற்றும் குறைந்த விலையில் பயிற்சி

பயிற்சி வகுப்புகளுக்கான செலவுகள் பரவலாக வேறு படுகின்றன. முறையான தகுதி பெறாத தனியார் பயிற்சி ஆசிரியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $30 என்பதிலிருந்து சில பாட நிபுணர்களுக்கு $200 வரை செலவாகலாம். சில வகுப்புகள் இலவசமாகக் கூட நடத்தப்படுகின்றன.

நூலகங்கள் போன்ற பல நிறுவனங்கள் homework help என்று வீட்டில் செய்து வர வேண்டிய விடயங்களுக்கு இலவசமாக உதவி வழங்குகின்றன. மேலும் சில திட்டங்கள், புலம்பெயர்ந்து புதிதாக இந் நாட்டிற்கு வந்தவர்களுக்கு உதவுகின்றன. என்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு சேவை வழங்கும் அமைப்பு, என்ற பாடசாலை முடிந்த நேரத்திற்குப் பின்னர் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துகிறது. கன்பராவில் அமைந்துள்ள இந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி Sonia Di Mezza, மாணவர்களிடையே நேர்மறையான விளைவுகளைக் கண்டுள்ளார்: “அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர அதிக தகுதியுடையவர்களாக உணர்கிறார்கள், அவர்களின் ஆங்கிலம் மேம்பட முடியும், கல்வி முறையைப் பற்றி அவர்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் அவர்.

பெற்றோரின் பங்கு

தனியார் பயிற்சி வகுப்புகள் பாடசாலைக் கல்வியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பக்கூடாது என்றும், பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் கல்வியில் ஈடுபட வேண்டும் என்றும் Mohan Dhall வலியுறுத்துகிறார்.

“அவர்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி என்னவென்றால், என் குழந்தைக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் அவர்களுடன் படிக்க முடியுமா? நான் அவர்களுடன் நேரத்தை செலவிட முடியுமா? இந்த கல்விப் பயணத்தில், என் குழந்தையுடன் இருக்க நான் எவ்வாறு என்னைத் தயார் செய்து கொள்ள முடியும்?” என்பவற்றை அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.


ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.



Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to [email protected]




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 



Share

Recommended for you