காயமடைந்த வனவிலங்குகளுக்கு எப்படி உதவலாம்?

NSW oli wok blong savem Koala taem ol bush faea, ol bush oli lus mo ol sik weh eii kam blong spolem fiuja blong iconic Ostrelean Animal ia

Sapos yu luk wan injured o sik wael laef, hemi impoten blong askem help blong wan speselis. Credit: Lisa Maree Williams/Getty Images

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கிறபோது காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளைச் சந்தித்தால், அவற்றுக்குத் தேவையான பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலியா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கண்டமாக இருப்பதன் விளைவாகவும், மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த தனித்துவமான பரிணாம வரலாற்றின் விளைவாகவும், உலகின் மிகவும் மாறுபட்ட மற்றும் கவர்ச்சிகரமான வனவிலங்குகளின் தாயகமாக ஆஸ்திரேலியா உள்ளது.

நீங்கள் ஆஸ்திரேலியாவிற்குள் பயணம் செய்கிறபோது இந்நாட்டின் தனித்துவமான வனவிலங்கு இனங்களில் சிலவற்றை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

துரதிர்ஷ்டவசமாக இந்த வனவிலங்குகள் சில நேரங்களில் நோய்வாய்ப்படலாம் அல்லது வாகனங்கள், தீ மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளால் காயமடையலாம். இப்படி காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளைக் கண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
Wael laef veterinarian Dr Tania Bishop - WIRES.jpg
Wael laef veterinarian Dr Tania Bishop - WIRES.jpg
ஆஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, குறிப்பாக நிலப்பரப்பு, காலநிலை மற்றும் வாழ்விடத்தின் அடிப்படையில் நீங்கள் காணக்கூடிய வனவிலங்குகளின் இனங்கள் மாறுபடும். பலவகையான பறவைகள், பாலூட்டிகள், பாம்பு வகைகள் உள்ளிட்ட பல தனித்துவமான விலங்குகள் ஆஸ்திரேலியாவில் உள்ளன.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் நீங்கள் மர கங்காருக்கள், முதலைகள் மற்றும் காசோவரிகளைக் காணலாம். வறண்ட மேற்குப் பகுதிகளில் ஈமுக்கள், சிவப்பு கங்காருக்கள் மற்றும் அழகான பாலைவனப் பறவைகள் உள்ளன. தெற்குப் பகுதிகளில் நீங்கள் possums, wombats, wallabies மற்றும் glider species ஐக் காணலாம். மேலும் கடல்நாய்கள், பெங்குவின் மற்றும் டாஸ்மேனியன் டெவில்கள் ஆகியவற்றை டாஸ்மேனியாவில் காணலாம்.
இந்நிலையில் காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளை நீங்கள் சந்தித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது முக்கியம். இதன்மூலம் வனவிலங்குகளுக்கு சிகிச்சை மற்றும் மீட்புக்கான சிறந்த வாய்ப்பை வழங்க முடியும்.
ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக கிராமப்புறங்களில் வனவிலங்குகளைப் பார்ப்பது அசாதாரணமான விடயம் அல்ல என்கிறார் கடந்த 24 ஆண்டுகளாக வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் அவற்றின் மீட்பு திட்டங்களில் பணிபுரிபவரும் Wildlife Information, Rescue and Education Service-ஐச் சேர்ந்தவருமான wildlife veterinarian-விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop.
Exploring Stradbroke Island near Brisbane
Stradbroke Island in Queensland, Australia Source: iStockphoto / Kevin LEBRE/Getty Images/iStockphoto
காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளை நீங்கள் கண்டால், கூடிய விரைவில் சிறப்பு உதவியை நாடுமாறு விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop பரிந்துரைக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் வனவிலங்கு மீட்பு மற்றும் பராமரிப்பு அமைப்புகள் உள்ளதால் வெவ்வேறு வழிகள் ஊடாக அவற்றின் உதவியை நாடுவது மிகப்பொருத்தமாக இருக்கும் என அவர் சொல்கிறார்.

உங்களது பாதுகாப்பும் மற்றவர்களின் பாதுகாப்பையும் முதலில் கருத்தில் கொள்வது முக்கியம் ஆகும்.

நீங்கள் சாலையோரங்களில் வனவிலங்குகளைக் கண்டால், உங்கள் காரை எளிதாகக் காணக்கூடிய இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி, நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதுடன் வனவிலங்குகளை முடிந்தவரை அமைதியாகவும், நிதானமாகவும் அணுகுமாறு விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop வலியுறுத்துகிறார்.

கங்காருக்கள், wallabies, wombats மற்றும் possums போன்ற பாலூட்டி இனங்களை இறந்த நிலையில் நீங்கள் சந்தித்தால், அவற்றின் வயிற்றிலுள்ள பையில் குட்டி ஏதேனும் இருக்கிறதா என்பதை பாதுகாப்பாக பரிசோதித்துப் பார்க்கலம்.

இதேவேளை வனவிலங்குகளுக்கான அடிப்படை முதலுதவி பெட்டியின் ஒரு பகுதியை வீட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடிய சில பொருட்களைக் கொண்டே உருவாக்கிக்கொள்ளலாம் என்கிறார் விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop.
A bettong with a cast and bandage on its fractured leg - WIRES.jpg
A bettong with a cast and bandage on its fractured leg - WIRES.jpg
காயம்பட்ட வனவிலங்குகளை விலங்குகள்நல மருத்துவர் ஒருவர் உடனடியாகப் பார்ப்பது முக்கியம்.

சட்டப்படி உரிமம் பெற்ற மற்றும் பயிற்சி பெற்ற வனவிலங்கு பராமரிப்பாளர்கள் மற்றும் விலங்குகள்நல மருத்துவர்கள் மட்டுமே ஆஸ்திரேலிய வனவிலங்குகளை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இந்த விலங்குகளுக்கான சிகிச்சைகள் மற்றும் தேவைகள் மிகவும் சிக்கலானவை என விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop சொல்கிறார்.

பொதுமக்கள் வனவிலங்கு மீட்பு சேவையை அழைத்தவுடன், தங்களால் அங்கு செல்ல முடிந்தால், அதற்குரிய பொத்தானை அழுத்துவோம் எனவும், அதன் பிறகு செயலி மூலம் தலைமை அலுவலகத்திலிருந்து கூடுதல் விவரங்களைப் பெறும் அதேநேரம் தகவல் தருபவரிடமிருந்தும் விவரங்களைப் பெற்று மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சொல்கிறார், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளைப் பராமரிக்க உதவுபவரும் WIRES அமைப்பைச் சேர்ந்தவருமான Morgan Philpott.

தாம் இந்தப் பராமரிப்புப் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு காரணம் ஆஸ்திரேலிய பூர்வீக விலங்குகள் மீதுள்ள அதீத ஆர்வமே என்கிறார் Morgan Philpott.
A young wallaby under general anaesthetic in a wildlife hospital receiving treatment for a fractured leg - WIRES.jpg
A young wallaby under general anaesthetic in a wildlife hospital receiving treatment for a fractured leg - WIRES.jpg
பராமரிப்பிலுள்ள வனவிலங்குகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பது குறித்த முடிவுகள் விலங்குகள்நல மருத்துவர்களுடன் இணைந்து எடுக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியா முழுவதும் வனவிலங்கு பராமரிப்பாளர்களுக்கான சட்டங்களில் சில வேறுபாடுகள் உள்ளன, ஆனால் பொதுவாக வனவிலங்கு பராமரிப்பாளர்கள் வனவிலங்குகளை வனப்பகுதிக்கு திரும்புவதற்கு தயார்படுத்துவதற்காக அவ்விலங்கிற்கு மறுவாழ்வு அளித்து பராமரிப்பார்கள். காடுகளில் உயிர்வாழத் தேவையான உடற்தகுதி மற்றும் திறன் கொண்டதாக அந்த விலங்கு மதிப்பிடப்பட்டவுடன் அவை விடுவிக்கப்படும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்த அனைத்து வனவிலங்குகளுக்கும் மறுவாழ்வளித்து விடுவிக்கவோ அல்லது அவற்றைக் காப்பாற்றவோ முடியாது என விலங்குகள்நல மருத்துவர் Tania Bishop சொல்கிறார்.

மிகவும் கடுமையாக காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகள் கருணைக்கொலைசெய்யப்பட வேண்டியிருக்கலாம் என அவர் விளக்குகிறார்.

நிறைவாக, காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட வனவிலங்குகளை நீங்கள் சந்தித்தால், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதேநேரம், வனவிலங்கு மீட்பு சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு விலங்குகள்நல Tania Bishop நினைவூட்டுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share