SBS Examines : 'Welcome to Country' குறித்து நாம் இப்போது விவாதிப்பது ஏன்?

Untitled design (3).png

The federal government spent almost half a million dollars on Welcomes to Country across two years according to an FOI released earlier this year. Credit: Supplied/AAP Photos

Welcome to Country பூர்வீகக்குடியின சடங்கு விழாவிற்கு அரசு செலவளித்துள்ள பணத்தொகை தற்போது பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிறகு Welcome to Country விழா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின்படி எதிர்க்கட்சியான Coalition கூட்டணி கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுத் துறைகளில் Welcome to Country பூர்வீகக்குடி சடங்கு நிகழ்வுகளுக்கு சுமார் $450,000 செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் இந்த பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பூர்வீகக்குடி விவகாரங்கள் மற்றும் அரசு செயல்திறனுக்கான பேச்சாளருமான Jacinta Nampijinpa Price, அனைத்து பூர்வீகக்குடி விவகார செலவினங்களையும் தணிக்கை செய்ய விரும்புவதாக கூறினார்.

Welcome to Country நிகழ்வுக்கு அரசு வரி செலுத்துவோர் நிதியைப் பயன்படுத்துவது ஒரு சரியான வழி அல்ல என்று Jacinta Nampijinpa Price SBS Examines-இடம் கூறினார்.

Closing the Gap செயற்த்திட்டம் மற்றும் பூர்வீகக்குடி மக்களுக்கு பொருளாதார அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது என்றும் ஆனால் எதிர்க்கட்சி Welcome to Country பற்றிய கலாச்சாரப் போர்களில் கவனம் செலுத்துகிறது என்று SBS Examines-க்கு அளித்த அறிக்கையில், பூர்வீகக்குடி ஆஸ்திரேலியர்களுக்கான அமைச்சர் Malarndirri McCarthy கூறினார். 

SBS Elder in Residence மற்றும் Bundjalung Nation-இன் Widjabul Wiyebal பெண்மணி, Aunty Rhoda Roberts, 1980-களில் 'Welcome to Country' என்ற வார்த்தையை உருவாக்கியதன் மூலம் வரலாற்றில் அது ஒரு சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றார்.
கல்வியாளர், மானுடவியலாளர் மற்றும் Yiman மற்றும் Bidjara பெண், பேராசிரியர் Marcia Langton AO, ஒரு தகவல் அறியும் உரிமை (FOI) மூலம் பெறப்பட்ட தகவல் பற்றி ஊடகங்களில் எழுந்துள்ள இந்த அவதூறு... கலாச்சாரப் போர் போன்று அசிங்கமாக உள்ளதாக கூறுகிறார்.

Welcome to Country விழா நடப்பதினால் அதன் மூலம் வருமானத்தை நம்பியிருக்கும் வணிகங்கள் இருப்பதாக செனட்டர் Price கூறுகிறார்.

கல்வி மற்றும் பூர்வீகக்குடி விவகார Commentator Dr Anthony Dillon, பூர்வீகக்குடி கலாச்சார வணிகங்களை விமர்சித்ததுடன் அரசு, Welcome to Country விழாவிற்கு செலவு செய்யும் பணத்தை சிறப்பாகச் செலவிட முடியும் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.

If this content has caused distress, please call the National Aboriginal and Torres Strait Islander Crisis Hotline 13YARN on 13 92 76.
LISTEN TO
Rumours, Racism and the Referendum image

Rumours, Racism and the Referendum

SBS English

14/10/202407:08

Share