உள்ளடக்க எச்சரிக்கை: இதனைக் கேட்கத் தொடங்குவதற்கு முன்னர் இந்த உள்ளடக்க எச்சரிக்கையைக் கேளுங்கள். இதனைக் கேட்கும் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய பாலியல் வன்முறையின் சில விடயங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன என்பதை நாம் முன்கூட்டியே அறிவிக்கிறோம்.
இந்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 85 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகின்றன. சுமார் மூன்று இளைஞர்களில் ஒருவர் தங்கள் விருப்பத்திற்கு எதிராக உடலுறவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் பாலியல் வன்முறையை எதிர் கொண்டிருந்தால், அல்லது உங்கள் சம்மதமில்லாமல் உடலுறவுக்குட்பட்டிருந்தால் உங்கள் அனுபவத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்கவும், குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதையும் நீங்கள் பரிசீலித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்வது பலருக்கும் பெரும் மனவுழைச்சலை ஏற்படுத்துகிறது.
மேலதிக தகவல்கள்

பாலியல் உறவில் இருதரப்பினரதும் சம்மதத்தை உறுதி செய்வது எப்படி?
SBS Tamil
08:31
“சில குற்றச் சாட்டுகள் சீருடை அணிந்த அதிகாரிகள் மூலமாகவும் சில அறிக்கைகள் நேரடியாகவும் எங்கள் பணி மனைக்கு வருகின்றன. குற்றம் சுமத்துபவர்கள் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதால் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள்.”
விக்டோரிய மாநில காவல்துறையின் மூத்த அதிகாரி Monique Kelley பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்புக் குழுவை வழி நடத்துகிறார். புகார் கொடுக்க வரும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தேவையான ஆதாரங்களையும் பெற்று அவர்கள் புகார்களைப் பதிவு செய்வது இவர் குழுவினரின் முக்கியப் பொறுப்புகளில் ஒரு பகுதியாகும்.
“நான்கு இலக்குகள் - பாதிக்கப்பட்டவரைத் பாதுகாப்பதும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் எங்களின் முதலாவது இலக்கு. அதற்கடுத்து, எங்களிடம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் முழுமையாக ஆராய்ந்து, அதன் ஒரு பகுதியாக, ஆதாரங்களைச் சேகரித்து, குற்றம் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம்.”
தொடர்புடைய கட்டுரை

ஆஸ்திரேலியாவில் உங்கள் மொழியிலேயே கிடைக்கும் மனநல சேவைகள்
தங்களுக்கு மிகவும் நம்பகமான ஒருவரை, பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், சாட்சியங்களை சேகரிக்கும் செயல்முறை மற்றும் காவல்துறையின் அறிக்கையை உருவாக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
"காவல் நிலையத்திற்கு வந்து புகார் தருபவர்கள் அதிர்ச்சிகரமான ஒரு தாக்குதலின் பின்னர் வருகிறார்கள் என்பதால், அவர்கள் மிகவும் மனவழுத்தத்திற்குள்ளாகியிருப்பார்கள் என்பதை மனதில் வைத்து அவர்களுடன் பேச வேண்டும் என்பதை எனது அதிகாரிகளுக்கு நான் அடிக்கடி ஞாபகப் படுத்துவேன். எனவே, அவர்களுக்குத் தேவையான நேரத்தைக் கொடுக்க வேண்டும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும், மேலும் அவர்கள் எங்களிடம் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாரபட்சம் இன்றி நாம் செவி மடுக்க வேண்டும்”
அதிர்ச்சிகரமான ஒரு தாக்குதலை அனுபவித்த ஒருவரை நாம் சந்திக்கிறோம், அதனால் அவருக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ அதை நாம் கொடுக்க வேண்டும் மற்றும் அத்துடன், அவர்கள் சொல்வதை நாம் செவி சாய்க்க வேண்டும், மேலும் அவர்கள் நம்மிடம் என்ன சொல்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.விக்டோரிய மாநில காவல்துறையின் Senior Sergeant Kelley
காவல்துறையிடம் புகாரளிப்பது
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர் அதிகாரிகளிடம் புகாரிட்டால், அவர்களுக்கு, சட்ட, மருத்துவ உதவி மற்றும் உள நல ஆலோசனை வழங்கப்படும். தடயவியல் ஆதாரங்களை சேகரிக்க அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது rape kit என்று அழைக்கப்படுகிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பதால், அவர்கள் பெண் மருத்துவர்கள் அல்லது அதிகாரிகளை அணுக விரும்புவதாகக் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த விருப்பம் எப்போதும் நிறைவேறாமல் போகலாம்.
பின்னர், புகாரளிப்பவர் விரிவான அறிக்கையைக் காவல்துறையிடம் கையளிக்க வேண்டும். இது ஒரே நாளில் நிகழாமல் இருக்கலாம்.
பல ஆண்டுகள் பாலியல் குற்றங்கள் தொடர்பான உயர்மட்ட வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் வழக்குரைஞர் Michael Bradleyக்கு இருக்கிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பாக ஆதரிக்க சட்ட சீர்திருத்தங்கள் தேவை என அவர் வாதிடுகிறார்.
“பாலியல் வன்கொடுமை குறித்து முறையிடுவது மிகவும் கடினமான விடயம், அது தவிர, அது குறித்து ஒரு அறிக்கையை எழுதுவது மேலும் கடினமான விடயம், ஆனால், தற்போதுள்ள நடைமுறையில் பாதிக்கப்பட்டவர் அனைத்தையும் ஒரே நேரத்தில் எழுத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அதில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டால் அல்லது வேறு விடயங்கள் பின்னர் சேர்க்கப்பட்டால் வழக்கு விசாரணை நடக்கும் போது அவை சாட்சியமாக சேர்க்கப்படாமல் போகலாம். அதனால் பாதிக்கப்பட்டவரின் மீது அதிக சுமையை ஏற்படுத்துகிறது.”
‘Asking for it’ என்ற ஆவணத் தொடரைத் தயாரித்துள்ள புலனாய்வுப் பத்திரிகையாளர் Jess Hill, சம்மதமற்ற பாலியல் வன்கொடுமை வழக்குகள் சட்டத்துறையால் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை ஆராய்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அறிக்கை சமர்ப்பிக்கும் போது, அது துல்லியமாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று Jess Hill கூறுகிறார். தாக்குதல் நடந்து நீண்ட காலம் கடந்தாலும் தாக்குதல்களைப் பதிவு செய்யலாம் என்கிறார் அவர்.
“காலக் கெடு எதுவும் இல்லை. இருந்தாலும், வெளிப்படையாக, நீங்கள் எவ்வளவு விரைவில் புகாரளிக்கிறீர்களோ சிறந்தது, ஏனென்றால் நீங்கள் அதை எவ்வளவு விரைவாக நீங்கள் அதை செய்கிறீர்களோ, ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காவல்துறைக்கு எழுதப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆவணமாகும். எனவே, அது சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் அறிக்கையைத் திரும்பப் படிக்க சங்கடப்படுவதாகப் பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றில் தவறுகளைப் பார்த்தாலும் அவற்றைத் திருத்தும் அளவுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அறிக்கையில் உள்ள அனைத்தும் சரியாக உள்ளது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் காவல் நிலையத்தில் இருப்பதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.”

Specialists say it's important for victim-survivors of rape to seek support services, as the process of reporting and going to court is re-triggering and retraumatising for many. Support services are available, whether or not the victim decides to report or engage in proceedings. Credit: FG Trade Latin/Getty Images
வழக்கை விசாரிக்க போதுமான ஆதாரங்களை காவல்துறை சேகரிக்க முடிந்தால், அரச வழக்குரைஞர் இயக்குனரால் (DPP - Director of Public Prosecutions) அந்த வழக்கு மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நடவடிக்கை எடுக்கத் தேவையான ஆதாரம் இருந்தால், DPP அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார். குற்றம் சுமத்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும், அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவரைக் காவல்துறை கைது செய்யக்கூடும்.
“அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றால், பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. நீதிமன்றத்தின் முன் அவர்களை நிறுத்த முடியும் என்று DPP நினைக்கவில்லை என்று அர்த்தம். எனவே, போதுமான ஆதாரங்கள் கிடைத்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதியப் படலாம். குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்படலாம் அல்லது பிணை இல்லாமல் விடுவிக்கப்படலாம். விசாரணை நடக்கும் வரை அவர்கள் காவலில் வைக்கப்படலாம், ஆனால், வழக்கு முடியும் வரை அவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியது அவசியமல்ல.”

Source: Supplied
நீதி மன்ற விசாரணை
வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற சாட்சிகள் (யாரேனும் இருந்தால்) சாட்சி வழங்க வேண்டும். அவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக இருப்பதற்கு உரிமை உண்டு. குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்று கூறலாம் அல்லது சிறிய பாலியல் குற்றங்களை மட்டுமே ஒப்புக் கொள்ளவும் முடியும்.
சட்ட அமைப்பு இப்படி அமைந்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் பலர் விசாரணையின் போது அந்நியமாக உணர்கிறார்கள். ஏதோ, தாம் தான் குற்றம் செய்தவர் என்பது போல் உணர்கிறார்கள் என்கிறார் வழக்குரைஞர் Michael Bradley.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விசித்திரமான விடயங்களில் ஒன்று, பெரும்பான்மையான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியமே ஒரே ஒரு சாட்சியாகும். முழு வழக்கையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய அனைத்துச் சுமையும் வழக்குத் தொடுப்பவர் மீது உள்ளது. அந்த பாலியல் செயல் சம்மதம் இல்லாமல் நடந்தது என்பதை நிரூபிப்பது மிகப் பெரிய சுமையாகும். அத்துடன், சம்மதம் கொடுக்கப்படாத சந்தர்ப்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் அதை சம்மதம் என்று நம்பினால், அந்த நம்பிக்கை நியாயமானது அல்ல.சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் எழுத்தாளர், வழக்குரைஞர் Micheal Bradley.
பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் நீதி மன்றங்களில் மௌனமாக இருப்பதாலும், சாட்சியமளிப்பதிலிருந்து அவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாலும், முழு விசாரணையும் பாதிக்கப்பட்டவர் வழங்கும் சாட்சியத்தில் தங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் உண்மை பேசுகிறாரா என்பது மட்டுமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
“எனவே, நடுவர் மன்றம் எப்பொழுதும் புகாரளித்தவர் அல்லது பாதிக்கப்பட்டவரின் கதையை மட்டுமே கேட்கும். அதுவே, அரச தரப்பிலிருந்து குற்றத்தை நிரூபிக்க வேண்டியதற்கான ஒரே ஆதாரம். எனவே பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தின் நம்பகத்தன்மையை இல்லாதொழித்து, நியாயமான சந்தேகத்தை எழுப்புவது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவருக்காக வாதாடுபவரின் செயல். புகாரளித்தவர் அல்லது பாதிக்கப்பட்டவர் பொய் சொல்கிறார் என்று நிருபிப்பதே அவர்கள் கடமை.”
நியாயமான சந்தேகத்தை எழுப்புவது மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவருக்காக வாதாடுபவரின் செயல். புகாரளித்தவர் அல்லது பாதிக்கப்பட்டவர் பொய் சொல்கிறார் என்று நிருபிப்பதே அவர்கள் கடமைவிக்டோரிய மாநில காவல்துறை Senior Sergeant Kelley
பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தங்கள் பாலியல் வன்கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்வதில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது. வன்கொடுமை அல்லது வன்புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளை பெண்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று நம் நாட்டில் வாழ்பவர்களில் ஐந்தில் ஒருவர் நினைக்கிறார் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை மற்றைய மேற்கத்திய நாடுகளை விட மிக அதிகமானது என்பது நோக்கத்தக்கது.
இருந்தாலும், அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத்தான் தான் சந்தேகித்துள்ளதாக Monique Kelley கூறுகிறார்.
“இந்தத் துறையில் ஏறக்குறைய ஒரு தசாப்தத்தைக் கழித்திருப்பதாலும், பல நிபுணர்களை சந்தித்திருப்பதாலும், இந்த சட்ட செயல்முறையில் யாரும் இறங்க விரும்பவில்லை என்பதை நான் அடித்துக் கூற முடியும். விசாரணை என்று வந்தால் பல விடயங்களில் தங்களை ஆய்வுக்குட்படுத்தப்படுவதை யாரும் விரும்புவதில்லை. எனவே, பொய்யாக யாரும் இப்படியான குற்றச்சாட்டை முன் வைப்பதில்லை.”

Source: AAP
“தண்டனை என்று வரும்போது, ‘குற்றம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்பது முதல் ‘சமூக சேவை செய்ய வேண்டும்' என்பது வரை பலவகையான தண்டனைகள் இருக்கலாம். குற்றவாளிக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். சில சமயங்களில் வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று பாதிக்கப்பட்டவர் உணர்ந்தால், அது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். தண்டனை விதிக்கப்படும் போது, பொதுவாக நீங்கள் இந்த சம்பவத்தால் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற அறிக்கையை வழங்கலாம், இது பல பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமான தருணம், அந்த குற்றம் அவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தால் எப்படியான பாதிப்பு ஏற்பட்டது என்பதை அவர்கள் கூற முடியும், குறிப்பாக அவர்களுக்கு எதிராக புண்படுத்திய நபர் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று கூற முடியும்,” என்கிறார் Jess Hill.
சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் முன் உறுதியான சம்மதத்தைப் பெற்றதாக என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் வகையில் சட்டங்களை அண்மைக் காலத்தில் மாற்றி வருகின்றனர்.
கேட்க

பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க ஒருவர் என்ன செய்யலாம்?
SBS Tamil
04:45
சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் முன் உறுதியான சம்மதத்தைப் பெற்றதாக என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் வகையில் சட்டங்களை அண்மைக் காலத்தில் மாற்றி வருகின்றனர்.
குற்றவியல் நீதி வழி முறையில் செல்லாமல், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் தங்கள் அனுபவத்தை முறையாகப் பதிவு செய்ய சில புதிய செயல் முறைகளை சில மாநில அரசுகள் அறிமுகப்படுத்துகின்றன.
“New South Wales மாநிலத்தில் போன்ற அறிக்கையிடல் செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நடக்கக் கூடிய பாலியல் வன்கொடுமையை அங்கு ஒருவர் புகாரளிக்கலாம், நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் நடந்த சம்பவம் அங்கு பதிவில் வைக்கப்படுகிறது,” என்கிறார் Jess Hill.

one person holding a banner with stop single word againd blue background Source: Moment RF / Carol Yepes/Getty Images
“பாதிக்கப்பட்டவர்களைப் பெரும்பாலும் உந்துவிப்பது, மற்றவர்களைப் பற்றிய அவர்களின் அக்கறையே. ஏனென்றால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஒருவர், ஒரு சம்பவத்துடன் நின்று விடுவதில்லை. இது போன்ற அறிக்கையிடல் அமைப்பின் அழகு என்னவென்றால், குற்றம் செய்தவர் குறித்து ஏற்கனவே கணினியில் வேறு அறிக்கைகள் இருந்தால், அதற்குப் பிறகு யாராவது அவர் குறித்து பதிவை மேற் கொண்டால், காவல்துறையினருக்கு அது குறித்துத் தெரியவரும். காவல்துறையினர் குறைந்தபட்சம், ‘நீங்கள் விசாரணையைத் தொடர விரும்புகிறீர்களா?’ என்று பாதிக்கப்பட்டவரிடம் கேட்கத் தூண்டலாம்.”
பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, காவல் துறையில் நீங்கள் புகார் செய்ய முடிவு செய்தாலென்ன, இல்லா விட்டாலென்ன, நீங்கள் அணுகக்கூடிய பல உள்ளன. நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால், 1800RESPECT ஐ அழைக்கவும். நீங்கள் ஐ 13 11 14 இல் தொடர்பு கொள்ளலாம் அல்லது 1800 22 46 36 என்ற இலக்கத்தில் வைத் தொடர்பு கொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.