பரந்த பாலைவனங்கள், வெப்பமண்டல மழைக்காடுகள், பனி படர்ந்த சிகரங்கள் மற்றும் யூகலிப்டஸ் காடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் தாயகமாக ஆஸ்திரேலியா உள்ளது.
இந்த வளமான தேசம் பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருக்கும் பல்வேறு உயிரினங்களை ஆராய்வதன் மூலம், நமது சுற்றுச்சூழலைப் பற்றியும், அதை எவ்வாறு சிறந்த முறையில் பராமரிக்கலாம் என்பதையும் நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
கூடுதலாக, இந்த செயல்பாடு புதிய வகை தாவரங்கள் அல்லது விலங்குகளைக் கண்டறியும் வாய்ப்பையும் வழங்குகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள உயிரினங்களை அடையாளம் கண்டு அதைப் பதிவு செய்வதில் ஈடுபடுவதன் மூலம் BioBlitz என்ற அறிவியல் செயல்பாட்டில் பங்கேற்கலாம்.
இது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Participants in the Walpole Wilderness Bioblitz - Daemon Clark
ஆனால் ஆஸ்திரேலியா ஒரு பரந்த இடம் - எனவே citizen science எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அறிவியல் தகவல்கள் அல்லது தரவைச் சேகரித்து வகைப்படுத்த உதவுவதற்கு பொதுமக்கள் தன்னார்வத் தொண்டு செய்ய வாய்ப்பு உள்ளது.
citizen science திட்டங்கள் விஞ்ஞான அறிவையும் சுற்றுச்சூழலைப் பற்றிய நமது புரிதலையும் அதிகரிக்க உதவுகின்றன, மேலும் அதை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள அனுமதிக்கிறது.
BioBlitz என்பது ஒரு citizen science செயல்பாடு ஆகும். இதில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல தாவர மற்றும் விலங்கு இனங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பொதுமக்களும் பங்கேற்கின்றனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கரையில், Walpole Wilderness Bioblitz என்ற citizen science செயல்பாட்டை விலங்குகள்நல மருத்துவர் David Edmonds ஒருங்கிணைக்கிறார்.

Dr David Edmonds examining plant species in the Walpole wilderness - by Phil Tucak
உள்ளூர் சமூகம், conservation , நிலப்பராமரிப்பு அல்லது இயற்கை வள மேலாண்மை குழுக்களால் நடத்தப்படும் BioBlitzஇல் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.
பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட இயற்கைப் பகுதியை ஆராய்ந்து அங்குள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தை முடிந்தவரை ஆவணப்படுத்வேண்டும்.

Online biodiversity database iNaturalist - Image David Edmonds and iNaturalist
BioBlitz இன் போது, தகவல்களை பல்வேறு வழிகளில் பதிவு செய்யலாம். உங்களது அவதானிப்புகளைப் பதிவுசெய்ய iNaturalist ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்துவது ஒரு எளிதான மற்றும் நேரடியான முறையாகும்.
BioBlitz இன் மூலம் சேகரிக்கப்பட்டு iNaturalist க்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் Atlas of Living Australiaக்கும் செல்கிறது. இந்த ஆன்லைன் பல்லுயிர் தரவுத்தளத்தை அனைவரும் இலவசமாக ஆராய்ந்து பார்க்கலாம்.
முந்தைய Walpole Wilderness Bioblitzஇல், சிலந்திகள், புழுக்கள் மற்றும் நத்தைகள் போன்ற முதுகெலும்பு இல்லாத விலங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியின்போது மேற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமூக தன்னார்வலர்களுடன் எவ்வாறு இணைந்து செயற்பட்டனர் என்பதை விளக்குகிறார் Walpole வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் சூழலியல் நிபுணரும் பிற விஞ்ஞானிகள், நில மேலாளர்கள், பாரம்பரிய பாதுகாவலர்கள், பூர்வீககுடியின ரேஞ்சர்கள் மற்றும் சமூக தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுபவருமான Melissa Howe.

Conservation veterinarian Dr David Edmonds in the Walpole wilderness - Phil Tucak
குறிப்பாக இனங்கள் பற்றிய மேலதிக ஆராய்ச்சிக்கு இவை உதவும். மற்றும் அவற்றின் விளக்கங்கள், உயிரியல் மற்றும் வாழ்விடத் தேவைகள் பற்றிய முக்கிய தகவல்களைப் பெறுவதிலும் பங்களிக்கிறது.
Walpole வனப்பகுதி போன்ற இதுவரை ஆய்வு செய்யப்படாத பகுதியில் ஒரு BioBlitzஐ ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானது எனவும் இதன்மூலம் வெவ்வேறு இனங்கள் மற்றும் சாத்தியமான புதிய இனங்கள் உள்ளனவா என்பதைப் பார்க்க முடியும் என்கிறார் விலங்குகள்நல மருத்துவர் David Edmonds.
இத்தகைய BioBlitzஇல் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாட்டுடனான உண்மையான தொடர்பை அனுபவிக்க முடியுமெனவும் David Edmonds நம்புகிறார்.
ஒரு BioBlitzஆனது விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை ஒன்றிணைப்பதால் ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் பல விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.