நாட்டில் புதிதாக குடியேறியவர்களுக்கான AMEP- ஆங்கிலக்கல்வி திட்டத்திற்கு மேலும் 20 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய விசா பரிசீலனையை விரைவுபடுத்தவென, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, உள்துறை அமைச்சுக்கு $42.2 மில்லியன் (இந்த ஆண்டு வழங்கப்படும் $40.9 மில்லியனுடன் சேர்த்து) வழங்கப்படுகிறது.
உக்ரேனியர்களுக்கான கூடுதல் மூன்று ஆண்டு தற்காலிக மனிதாபிமான விசாக்களுக்காக அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தம் $18.4 மில்லியன் வழங்கப்படுகிறது. அதேநேரம் Bridging விசாவில் உள்ள உக்ரேனியர்களுக்கு மெடிகெயாரை 12 மாதங்களுக்கு நீட்டிக்கவும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு உதவுவதற்கான பரீட்சார்த்த திட்டத்திற்கென, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் $12.6 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் கடல்கடந்த தடுப்புமுகாம் செயலாக்க செலவுகளில் கூடுதலாக $150 மில்லியன் சேர்க்கப்பட்டுள்ளது.(2022-23 ஒதுக்கீடு $632.5 மில்லியனாக அதிகரித்துள்ளது)
பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் சர்வதேச மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப, இந்த நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு மொத்தம் $1.4 பில்லியன் கூடுதல் மேம்பாட்டு உதவியை அரசு வழங்கும்.
சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சார கொள்கை அமைப்புகளை மதிப்பாய்வு செய்ய, 2 ஆண்டுகளுக்கு மொத்தம் $1.0 மில்லியன் வழங்கப்படுகிறது.
அதிக இளம் ஆஸ்திரேலியர்கள் இரண்டாம் மொழியைக் கற்க உதவும்வகையில், சமூக மொழிப் பள்ளிகளுக்கான மானியத் திட்டத்தை உருவாக்கவென 4 ஆண்டுகளுக்கு மொத்தம் $18.2 மில்லியன் ஒதுக்கப்படுகிறது.
Humanitarian visa program- அகதிகளுக்கான மனிதாபிமான திட்டத்தின்கீழ் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மனிதாபிமான திட்டம் 2022-23 இல் 13,750 அகதிகளுக்கான இடங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக 16,500 இடங்கள்(அடுத்த 4 ஆண்டுகளுக்கு) ஆப்கானிய அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Skilled migrants மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்களை உள்ளடக்கிய permanent migration திட்டத்தை 160,000 விசா இடங்களிலிருந்து 195,000 ஆக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.