வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஏற்கனவே ஆஸ்திரேலியாவிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் கொடுக்குமாறு வலியுறுத்தி, சுமார் 3000 பேர் கையெழுத்து மனு ஒன்றை உள்துறை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அக்டோபர் 6 அன்று, பொறியியல், சுகாதாரம் மற்றும் கல்விசார் தொழில்களை இலக்காகக் கொண்டு, Skilled independent 189 விசாக்களுக்கான 12,500 க்கும் மேற்பட்ட invitation-களை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டது.
points-based system மூலம் தீர்மானிக்கப்படுகின்ற 189 விசாக்கள், நிரந்தர விசா என்பதுடன் குறைவான கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பதால், இதனைப் பலரும் விரும்புவதுண்டு.
இருப்பினும், invitation-களில் பெரும்பாலானவை நாட்டிற்கு வெளியே வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது "நியாயமற்றது" என்பதை வலியுறுத்தும் வகையிலும், விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கையெழுத்து மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவிலுள்ள விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பொருத்தமான வேலைகள் மற்றும் பணி அனுபவம் பெற்றுள்ளனர் எனவும், அவர்கள் அதிகளவு ஆங்கில புலமையையும் ஆஸ்திரேலியாவுடன் வலுவான தொடர்புகளையும் கொண்டுள்ளனர் எனவும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க உள்துறை அமைச்சு, ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களை விட வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது இது முதல் முறையல்ல எனவும், regional skilled 887 விசா மற்றும் state-nominated 190 விசா போன்ற பிற skilled migrant விசா வகைகளுக்கும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கலாம் என்று குடிவரவு அமைச்சர் Andrew Giles தெரிவித்துள்ளார்.
ஹோபார்ட்டில் நடந்த Migration Institute of Australia தேசிய மாநாட்டில் கருத்துவெளியிட்ட அமைச்சர் Giles, "குறுகிய கால நெருக்கடிக்கு" பதிலளிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.