ஆஸ்திரேலியாவிலுள்ள ஒருவர் 887 skilled regional விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு, அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 24 மாதங்கள் ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
887 விசாவானது ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்ட Regional பகுதிகளில் வாழ்ந்து அங்கு பணிபுரிந்த மக்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான பாதையை வழங்குகிறது.
இந்த விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்வரை காத்திருக்க நேரிடுவதால், தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அதேநேரம் தமது காலமும் விரயமாவதாக விண்ணப்பதாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விசாவிற்கான பரிசீலனைக்காலப்பகுதி 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 10 மாதமாக காணப்பட்டதாகவும், தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை மற்றும் கொரோனா பரவல் போன்றவை காரணமாகவே, விசா விண்ணப்ப பரிசீலனை காலப்பகுதி கடந்த 2018 முதல் இந்தளவிற்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.