NSW மாநில skilled migration திட்டத்திற்கான விசா நிபந்தனைகளில் மாற்றம்

2022-23 ஆம் ஆண்டிற்கான skilled migration திட்டத்தின் கீழ் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு 12,000 விசா இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசு புதிய விசா நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. மேலும் Subclass 190 மற்றும் Subclass 491 விசா விண்ணப்பதாரர்களுக்கான வேலை தொடர்பிலான நிபந்தனைகளையும் சேர்த்துள்ளது.

Australian Budget 2017

Source: SBS

2022-2023 ஆண்டிற்கான அதன் skills பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டுள்ள NSW அரசு, minimum point scores மற்றும் பணி அனுபவத்திற்கான புதிய நிபந்தனைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

"NSW nomination-க்கு தகுதிபெற வேண்டுமெனில் நீங்கள் (விண்ணப்பதாரர்) minimum point score-ஐயும் உங்கள் தொழிலுடைய ANZSCO unit group-இல் குறைந்தபட்ச பணி அனுபவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று NSW அரசு கூறியுள்ளது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் Finance Manager-நிதி மேலாளராக(தொழில் குறியீடு 132211) பணிபுரிவதற்கு தகுதியானவராக இருந்தால், invitation சுற்றில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டுமெனில் minimum point score 110-ஆகவும், மூன்று ஆண்டுகள் தகுதியான பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

Skilled Nominated Subclass 190 விசா மற்றும் Skilled Work Regional Subclass 491 விசா ஆகியவற்றுக்கே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்கு -க்குச் செல்லவும்.

இதேவேளை NSW உட்பட பல ஆஸ்திரேலிய மாநிலங்கள் 2022-23 நிதியாண்டிற்கான skill migration திட்டத்தை, ஆஸ்திரேலியாவிலுள்ளவர்களும் வெளிநாடுகளிலுள்ளவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளன.

விசாக்கள் பற்றிய உத்தியோகபூர்வ தகவல் மற்றும் ஏனைய அனைத்து விவரங்களையும் இல் பெற்றுக்கொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 5 October 2022 5:47pm
Updated 5 October 2022 5:50pm
Source: SBS

Share this with family and friends