உங்கள் காரை தெருவில் நிறுத்தாமல், nature strip எனப்படுகின்ற வீட்டுக்கும் வீதிக்கும் இடைப்பட்ட புற்கள் உள்ள தரைப்பகுதியில், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறுத்திய அனுபவம் உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால், இது சட்டத்திற்குப் புறம்பானது என்பதுடன் உங்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.
Nature stripஇல் வாகனத்தை நிறுத்தும்போது பாதசாரிகளுக்கு இடையூறாக இருக்கலாம் அல்லது தண்ணீர், தொலைத்தொடர்பு மற்றும் பிற பயன்பாட்டு விடயங்களை அணுகுவதில் இது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் nature stripஇல் வாகனத்தை நிறுத்துவதை சட்டவிரோதமாக்கியிருக்கின்றன.
விக்டோரியா அதிகாரிகளின் கூற்றுப்படி, nature stripஇல் வாகனம் நிறுத்துவது சாலைப் பாதுகாப்புச் சாலை விதி 197 இன் கீழ் சட்டவிரோதமானது. அதாவது bicycle path, footpath, shared path அல்லது dividing strip அல்லது nature strip இல் வாகனத்தை நிறுத்தக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் காரின் நான்கு சக்கரங்களாகவோ அல்லது இரண்டு சக்கரங்களாகவோ இருந்தாலும் பரவாயில்லை, காரின் ஒரு பகுதி nature stripக்கு மேல் இருந்தால், அது சட்டவிரோதமானது மற்றும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
எனினும் nature strip ஒன்றில் வாகனத்தை நிறுத்தலாம் என அடையாளமிடப்பட்டிருந்தால் மாத்திரம், அதில் நீங்கள் வாகனங்களை நிறுத்தலாம்.
விக்டோரியாவையொத்த சட்டங்களே தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்திலும் காணப்படுகின்றன.
ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் இச்சட்டம் கவுன்சில்களுக்கு கவுன்சில் மாறுபடுகின்றது.
உதாரணமாக Cockburn மற்றும் City of Swan போன்ற சில கவுன்சில்களின் சட்டத்தின்படி, பக்கத்து நில உரிமையாளரிடமிருந்து உங்களுக்கு அனுமதி இருக்கும் வரை நீங்கள் nature stripஇல் உங்கள் வாகனத்தை நிறுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.