Drivewayயுடன் கூடிய ஒரு வீட்டில் நீங்கள் வசிப்பவர் என்றால், ஒரு முறையாவது அந்த Drivewayஇன் குறுக்கே வாகனத்தை நிறுத்த நீங்கள் நினைத்திருக்கலாம்.
இல்லையெனில், உங்கள் வீட்டிற்கு வருகைதரும் நண்பர்களை அல்லது வர்த்தகர்களை, தெருவில் வேறு இடங்கள் கிடைக்காதபோது Drivewayஇன் குறுக்கே நிறுத்துமாறு நீங்கள் ஊக்குவித்திருக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வாகனத்தினுள் நீங்கள் இருந்தபடி Drivewayஇல் நிறுத்திவைத்திருப்பது குற்றமல்ல என்று நினைக்கலாம் இல்லையா?
தவறு. துரதிர்ஷ்டவசமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் - Drivewayஇன் குறுக்கே-அது உங்கள் சொந்த Drivewayஆக இருக்கலாம்-அல்லது வேறொருவரின் Drivewayஆக இருக்கலாம்-வாகனத்தை நிறுத்துவது எப்போதுமே சட்டவிரோதமானது.
இருப்பினும், மிகக்குறுகிய நேரத்திற்கு வாகன ஓட்டிகள் தங்கள் Drivewayஐ பயன்படுத்த அனுமதியுண்டு.
குறிப்பாக பயணிகளை இறக்கிவிடுவதற்கு அல்லது ஏற்றிச் செல்வதற்கு மாத்திரம் Drivewayஐ பயன்படுத்தலாம். ஆனால் வாகனத்தை விட்டு ஓட்டுநர் இறங்கக்கூடாது என்பதுடன், 2 நிமிடங்களுக்குள் அங்கிருந்து அகன்றுவிட வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தைத் தவிர, ஒரு ஓட்டுநர் Drivewayஇன் குறுக்கே வாகனத்தை நிறுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இருப்பினும், பொலிஸ் மற்றும் அவசரசேவை வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகன ஓட்டி இந்த சாலை விதியை மீறினால், அவருக்கு அபராதம் விதிக்கப்படும். பள்ளி மண்டலம் என்றால் அபராதம் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.