மெல்பனின் Sunshine North பகுதியில், காரின் முன்புற கண்ணாடி, பின்புற கண்ணாடி அல்லது engine-ஐ மறைப்பதற்கான panels எதுவும் இல்லாத நிலையில் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு 740 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, 41 வயதான குறித்த பெண்ணுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
Brighton பகுதியைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு, பொலிஸார், ஏற்கனவே அந்த வாகனம் பாதுகாப்பற்றது என்று எச்சரித்ததுடன் அதை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையையும் மீறி காரைப் பயன்படுத்தியதற்காக அந்தப் பெண்ணுக்கு $740 அபராதம் மற்றும் மூன்று demerit புள்ளிகளும் விதிக்கப்பட்டன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.