குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்கள் மூலம், அம்மாநில அரசுக்கு நாளொன்றுக்கு சுமார் 752,000 டொலர்கள் வருமானமாக கிடைக்கின்றன.
வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்துதல், சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்லுதல் போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகிறது.
குயின்ஸ்லாந்திற்கான சமீபத்திய Transport and Main Roads ஆண்டறிக்கையில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, குயின்ஸ்லாந்து மாநில சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் அகப்பட்ட வாகன ஓட்டிகள், கடந்த நிதியாண்டில் மொத்தம் 274.5 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்தியிருக்கிறார்கள்.
சாலை விதிமீறல்களில் இருந்து மாநில அரசு சேகரிக்கும் வருவாய், சாலைப் பாதுகாப்புப் பிரச்சாரங்கள், கல்வித் திட்டங்கள் மற்றும் அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலையின் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்குச் செல்கிறது.
நாட்டிலேயே மிகக் கடுமையான சாலை விதிகள் உள்ள மாநிலமாக குயின்ஸ்லாந்து காணப்படுகின்ற அதேநேரம், சாலை விதிமீறல்களுக்கான அபராதத்தொகையும் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது