நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு charging-மின்னேற்றுவதற்கான வசதியுடன் அமைந்துள்ள தரிப்பிடத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை நிறுத்துபவர்கள், அதிகபட்சம் 2,200 டொலர்கள் வரை அபராதத்தை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப் புதிய சட்டம், “EV-மின்சார வாகனம் அல்லாத ஒரு வாகனத்தின் ஓட்டுநர் மின்சார வாகனங்களுக்கான தரிப்பிடத்தில் நிறுத்தக்கூடாது” என்று கூறுகிறது.
இவ்விதி மீறலுக்கான அதிகபட்ச அபராதம் 20 penalty units, அதாவது 2,200 டொலர்களாகும். (ஒரு penalty unitஇன் பெறுமதி 110 டொலர்கள்)
அதேநேரம் மின்சார வாகனத்தை குறித்த இடத்தில் நிறுத்துபவர்கள் தமது வாகனம் வெளிப்புற மின்சார மூலமொன்றிலிருந்து charge ஆகிக்கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதேவேளை மின்சார வாகனங்களுக்கான charging இடங்களில் நிறுத்தப்படும் ஏனைய கார் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்த முதல் ஆஸ்திரேலிய மாநிலம் விக்டோரியா ஆகும். கடந்த டிசம்பர் 2020 இல் விக்டோரியா இவ்விதியை அதிகாரப்பூர்வமாக்கியது.
கூடுதலாக, மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் அந்த இடத்தைப் பயன்படுத்தும் போது தங்கள் வாகனம் வெளிப்புற மின்சார மூலமொன்றிலிருந்து charge ஆகிக்கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில் மேற்குறித்த இரண்டு குற்றங்களுக்கும் விக்டோரியாவில் அதிகபட்சம் 369.84 டொலர்கள்வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதேபோல், குயின்ஸ்லாந்து மாநிலம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கான charging பகுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை நிறுத்தும் அம்மாநில ஓட்டுநர்களுக்கு அதிகபட்சம் 20 penalty units, அதாவது 2,875 டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம். (ஒரு penalty unitஇன் பெறுமதி 143.75 டொலர்கள்.)
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.